Semi -Final போட்டியில் மழை பெய்தால் இந்திய அணிக்கு Jackpot தான் ; காரணம் இதுதான் ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐசிசி டி-20 லீக் போட்டிகள் கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இன்று மற்றும் நாளை இரு தினங்களில் செமி பைனல் போட்டியும் 13ஆம் தேதி அன்று இறுதி போட்டியும் நடைபெற உள்ளது.

Semi-Final சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நான்கு அணிகள் :

இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பான நிலையில் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டு அதிரடியாகவும் சிறப்பாகவும் இருக்கிறது தான் உண்மை. இரு குரூப் பிரிவில் இருந்து முதல் இரு அணிகள் மட்டுமே Semi – Final சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அதில் குரூப் 1ல் இருந்து நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணியும், குரூப் 2ல் இருந்து இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் செமி பைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதனால் இனிவரும் போட்டிகள் நிச்சியமாக விறுவிறுப்பான போட்டியாக அமைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இன்று மதியம் நடைபெற உள்ள போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாட உள்ளனர். அதேபோல நாளை நடைபெற உள்ள போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர்.

இந்த இரு போட்டிகளில் வெல்லும் அணி தான் ஐசிசி டி-20 2022 போட்டிக்கான இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இந்த முறை கோப்பையை வெல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ?

இந்திய அணியின் நிலை:

இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா, பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இல்லாவிட்டாலும் அர்ஷதீப் சிங், ஷமி போன்ற வீரர்கள் சிறப்பாக தான் பவுலிங் செய்து வருகின்றனர். ஆனால் பேட்டிங் இப்பொழுது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆமாம், அதிலும் குறிப்பாக தொடக்க ஆட்டம் தான். இந்த உலகக்கோப்பை போட்டியில் கே,எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை என்பது தான் உண்மை. இருந்தாலும் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் போட்டிகளில் வென்று வருகிறது இந்திய.

மழை பெய்தால் என்ன நடக்கும் ?

இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அங்கு போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கும்போது அல்லது போட்டியை தொடங்கவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. அதனால் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ள செமி பைனல் போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

ஒருவேளை செமி பைனல் போட்டியில் மழை பெய்து போட்டியை நடத்த முடியாமல் போனால், புள்ளிபட்டியலில் இருக்கும் முதல் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள். அதாவது குரூப் 1ல் இருந்து நியூஸிலாந்து அணியும், குரூப் 2ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியும் நேரடியாக இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.

இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் யார் யார் மோத போகின்றனர். இந்த ஆண்டு கோப்பையை வெல்ல போகும் அணி எது ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here