பாகிஸ்தான் அணியை வெல்ல திட்டம் போட்ட இங்கிலாந்து அணி ; இங்கிலாந்து அணியில் இடம்பெற போகும் முக்கியமான வீரர் இவர் தான் ;

மெல்போர்ன் : கடந்த மாதம் அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய ஈசி டி-20 லீக் போட்டிகள் நாளையுடன் நிறைவடைய போகிறது. நாளை மதியம் 1:30 மணியளவில் தொடங்க உள்ள போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர்.

இதுவரை இந்த இரு அணிகளும் 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 18 போட்டிகளிலும், பாக்கிஸ்தான் அணி 9 போட்டிகளில் வென்ற நிலையில் 1 போட்டி முடிவு இல்லாமல் போய்விட்டது. அதனால் நாளை நடைபெற உள்ள போட்டியில் இங்கிலாந்து அணிக்கு தான் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

பாகிஸ்தான் அணியின் விவரம் :

இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியின் செமி பைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்த பாகிஸ்தான் அணி இப்பொழுது இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதற்கு முக்கியமான காரணம் நெதர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்கா அணி தோல்வி பெற்றதது தான். ஒருவேளை தென்னாபிரிக்கா அணி வென்றிருந்தால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் போயிருக்கும்.

அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. அதில் முதல் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 152 ரன்களை அடித்தனர். பின்பு பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற வீரர்களின் பார்ட்னெர்ஷிப் காரணத்தால் நியூஸிலாந்து அணியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்று தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கிலாந்து அணி :

குரூப் 1 ஐ சேர்ந்த இங்கிலாந்து அணி 5 போட்டியில் விளையாடிய 3 போட்டியில் வென்ற நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. பின்னர் இரு தினங்களுக்கு முடிந்த இரண்டாம் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்டது இங்கிலாந்து. அதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை எதிர்த்து இறுதி போட்டியில் விளையாட உள்ளனர்.

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய விளையாடிய இங்கிலாந்து அணியின் ப்ளேயிங் 11ல் மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து வீரரான டேவிட் மலன், மார்க் வுட் போன்ற வீரர்களுக்கு காயம் இருப்பதால் நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கின்றனர். ஆனால், நாளை நடைபெற உள்ள மைதானத்தில் ஸ்விங் பந்துகளுக்கு சிறப்பாக அமையும் என்றதால் கிறிஸ் ஜோர்டான்-க்கு பதிலாக டேவிட் வில்லே இடம்பெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும்பட்சத்தில் பவுலிங் சற்று கவனமாக வீசினால் இந்த ஆண்டு உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு அதிகமாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பையை யார் வெல்ல வேண்டும் ?