விராட்கோலி, ரோஹித் போல 1000 வீரர்கள் இந்திய அணிக்கு கிடைக்காமல்; ஆனால் இவரை போல ஒரு கேப்டன் இனி இந்தியாவிற்கு கிடைக்காது ; கம்பிர் புகழாரம் :

ஐசிசி டி-20 உலகக்கோப்பை : கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய உலகக்கோப்பை போட்டிகள் நாளை மதியத்துடன் நிறைவடைய போகிறது. இறுதி போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாட உள்ளனர். இதில் பாகிஸ்தான் அணி 2009ஆம் ஆண்டு உலககோப்பையையும், இங்கிலாந்து அணி 2010ஆம் ஆண்டு உலககோப்பையையும் வென்றுள்ளனர். அதனால் நாளை நடைபெறும் போட்டியில் யார் வெல்ல போகிறார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

வெளியேறிய இந்திய கிரிக்கெட் அணி :

இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆனால் பவுலிங் வலுவாக இல்லாத காரணத்தால் இங்கிலாந்து அணிக்கு எதிரான செமி பைனல் போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் தவித்தது இந்திய. அதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. தோல்வி பெற்ற காரணத்தால் சீனியர் வீரர்கள் அனைவரும் அணியில் இருந்து விலக வேண்டுமென்றும், தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாதது தான் இந்திய அணிக்கு முக்கியமான தோல்வி என்றும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்திய அணியின் தோல்வி முக்கியமான காரணத்தை பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் “இந்திய அணியில் ரோஹித் சர்மாவை போல பல வீரர்கள் இரட்டை சதம் அடிக்க முடியும், அதேபோல விராட்கோலியை போல அதிகமான சதம் அடிக்க முடியும். ஆனால் இதுவரை மூன்று உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல காரணமாக இருந்துள்ளார் தோனி. அவரை போன்ற ஒரு கேப்டன் நிச்சியமாக இந்திய அணிக்கு மீண்டும் கிடைக்க போவதில்லை என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர்.”

எப்பொழுதும் தோனியை பற்றி விமர்சனம் அல்லது மறைமுகமாக பேசி வரும் கவுதம் கம்பிர், இப்படி பேசியது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மட்டும் தான் அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் பெற்று கொடுத்துள்ளார். தோனி போன்ற ஒரு கேப்டன் மீண்டும் இந்திய அணிக்கு அமையுமா ??