முதல்ல இவங்க இருவரையும் இந்திய அணியில் இருந்து வெளியே அனுப்புங்க ; அப்பொழுது தான் இந்திய அணிக்கு நல்லது ; முன்னாள் வீரர் அதிரடி பேட்டி ;

0

இந்திய அணியில் தொடரும் சோகம் :

மற்ற அணிகளுக்கு இடையேயான தொடர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடருகளை கைப்பற்றி வரும் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற பல நாடுகள் பங்களிக்கும் போட்டியில் மட்டும் தொடர்ந்து மோசமான நிலையில் விளையாடி வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை 2022ல் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வி பெற்ற நிலையில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இந்திய. அதனை அடுத்து இப்போழுது ஐசிசி டி-20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால், நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வி பெற்றதால் உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் :

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பேட்டிங் அதிரடியாக இல்லாமல் நிதானமாக விளையாடி கொண்டு வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இருந்து இந்திய அணியின் பேட்டிங்-ல் அதிரடியாக விளையாட தொடங்கினார்கள். அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விராட்கோலி பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் திணறினார்.

ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியில் இருந்து கம்பேக் கொடுத்த விராட்கோலியின் பங்களிப்பு இந்திய அணிக்கு கூடுதல் பலமாக மாறியது. அதுமட்டுமின்றி, விராட்கோலி, சூர்யகுமார் , ஹர்டிக் பாண்டியாவின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக மாறியது. அதனால் இந்திய அணியின் பேட்டிங் பற்றிய கவலை இல்லாமல் இருந்தனர்.

ஆனால் பவுலிங் மோசமான நிலையில் இருந்தது தான் உண்மை. ஏனென்றால், முன்னணி வீரரான பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் காயம் ஏற்பட்ட காரணத்தால் உலகக்கோப்பை 2022ல் விளையாட முடியாமல் போய்விட்டது. அதனால் அர்ஷதீப் சிங், புவனேஸ்வர் குமார், ஷமி போன்ற வீரர்கள் இடம்பெற்றனர். இவர்களுது பவுலிங் எதிர்பார்த்த அளவிற்கு கூட இல்லை என்பதை இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நிரூபித்துவிட்டனர்.

ஆமாம், அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் தவித்தனர். அதனால் இந்தியா அணியில் சில சீனியர் வீரர்கள் இந்திய அணியில் இருந்து வெளியேற வேண்டுமென்று பல கருத்துக்களை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதனை பற்றி பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான டாம் மூடி முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “அடுத்த உலகக்கோப்பை போட்டிக்கு இன்னும் இரு ஆண்டுகள் இருக்கின்றன. அதனால் அடுத்த உலகக்கோப்பை போட்டிக்கு இடையே அதிகப்படியான போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி விளையாடினால் நான் நிச்சியமாக ஆச்சரியப்படுவேன். அதுமட்டுமின்றி, அடுத்த உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியதுடன் அமர்ந்து என்ன செய்ய வேண்டுமென்று முடிவுகளை எடுக்க வேண்டும்.”

“ஏனென்றால், அவர்கள் (ரோஹித் சர்மா, விராட்கோலி) இந்திய அணிக்காக விளையாடுவதில் என்ன பலன் இருக்கிறது. ஐபிஎல் போன்ற போட்டிகளை தவிர்த்து..! என்று கூறியுள்ளார் டாம் மூடி.”

இனிவரும் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி இந்திய அணியில் தொடர வேண்டுமா ?? இல்லையா ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here