ரோஹித் சர்மாவே நினைத்தாலும் இந்த இருவரை அணியில் இருந்து வெளியேற்ற முடியாது ; ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித்-க்கு ஏற்பட்ட ட்விஸ்ட் ;

0

கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற உள்ளது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளில் இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதிலும் தென்னப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடரையும் கைப்பற்றியுள்ளனர். எப்பொழுதும் தொடரில் வெற்றி பெறும் இந்திய அணி ஐசிசி போன்ற போட்டிகளில் தோல்விகளை தான் பெற்று வருகின்றனர்.

ஆனால் இந்தமுறை ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதனால் இந்த முறை ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்ல கூட அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும் நேரத்தில் பவுலிங் மோசமான நிலையில் உள்ளது தான் உண்மை.

ஆமாம், அர்ஷதீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் வீரர்கள் மிகவும் மோசமான நிலையில் பவுலிங் செய்து வருகின்றனர். அதிலும் ஆவேஷ் கான் அதிக ரன்களை கொடுத்து வருகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஓவருக்கு 9.5 ரன் கொடுத்துள்ளார். அதேபோல ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில் ஓவருக்கு 13.20 ரன்கள் கொடுத்துள்ளார் ஆவேஷ் கான். இதுவரை நடந்த போட்டிகளில் இவர் மட்டும் தான் அதிகமான ரன்களை கொடுத்து வந்துள்ளார்.

அதேபோல தான் அர்ஷதீப் சிங்-கும் ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில் ஓவருக்கு 11 ரன்களையும் , பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஓவருக்கு 8.6 ரன்களையும் கொடுத்துள்ளார். விக்கெட்டும் பெரிய அளவில் பெரிய அளவில் கைப்பற்றவில்லை. ஆனால் எதற்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுக்கிறார்கள் என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஆமாம், இந்திய அணியின் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் இவர்களை அடுத்து வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் யாரும் இல்லை என்பது தான் உண்மை. இன்னும் விளையாடாமல் ரவி பிஷானி, ரவிச்சந்திரன் அஸ்வின், தீபக் ஹூடா மற்றும் ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் தான் மீதமுள்ளனர். அப்படி இருக்கும் நிலையில் ரோஹித் ஷர்மாவே நினைத்தாலும் ஆவேஷ் கான் மற்றும் அர்ஷதீப் சிங்-க்கு வாய்ப்பு கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் வீரர்கள் தேர்வு செய்ததில் தவறு ஏற்பட்டுள்ளதா ? ஏனென்றால் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் போன்ற முக்கியமான வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ள காரணத்தால் ஆசிய கோப்பையில் பங்கேற்க முடியாமல் போனதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here