சென்னை அணியில் தான் ரவீந்திர ஜடேஜா விளையாட போகிறார் ; கிட்டத்தட்ட உறுதி செய்தது சிஎஸ்கே அணி ; முழு விவரம் இதோ ;

0

இந்தியாவில் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 15 ஆண்டுகள் நடந்து முடிந்துள்ளது.

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்ற அணிகளுள் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த 2008ஆம் ஆண்டு அதாவது ஐபிஎல்அறிமுகம் ஆன தேதியில் இருந்து கடந்த ஐபிஎல் 2022 ஆரம்பிக்கும் முன்பு வரை மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

ஆமாம், இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, தோனி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அப்படி இருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டு அல்லது இரு ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் விலக அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதனால் அடுத்த கேப்டனாக யார் இருக்கும் என்று பல கேள்விகள் எழுந்தன. அனைவரும் எதிர்பார்த்த வகையில் ஐபிஎல் 2022 தொடங்கும் இரு தினங்களுக்கு முன்பு ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக அறிவித்தனர். ஆனால் ஒரு கேப்டனாகவும் , ஒரு ஆல் – ரவுண்டராகவும் ஜடேஜா நிரூபிக்க தவறிவிட்டார் என்பது தான் உண்மை.

சென்னை அணி மோசமான நிலையில் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில், அதிரடியாக மீண்டும் தோனியை கேப்டனாக மாற்றினார்கள். பின்பு அந்த நேரத்தில் பல குழப்பங்கள் நிலவியது. அதுமட்டுமின்றி தீடியென்று ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக ஐபிஎல் 2022 போட்டிகளில் இருந்து விலகியது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை.

அதுமட்டுமின்றி, சென்னை அணியை பற்றிய பதிவுகளை அவரது சமூகவலைத்தளங்களில் இருந்து ரவீந்திர ஜடேஜா டெலிட் செய்தது சர்ச்சை ஆனது. அடுத்த ஆண்டு சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா விளையாட போவதில்லை என்று பலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இன்னும் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு ரவீந்திர ஜடேஜா தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்த நேரத்தில் ரவீந்திர ஜடேஜாவிற்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இனிவரும் போட்டிகளில் அவரால் விளையாட முடியாது என்றும் பிசிசிஐ உறுதியாக கூறியுள்ளனர். அதனால் அவருக்கு பதிலாக ஆல் – ரவுண்டர் அக்சர் பட்டேல் அணியில் இடம்பெற போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரவீந்திர ஜடேஜா விரைவாக குணமடைந்து வலுவாக மீண்டும் வாருங்கள் என்று சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

அதனால் ரவீந்திர ஜடேஜா நிச்சியமாக சென்னை அணியில் தான் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. கடந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற்ற காரணத்தால் ரவீந்திர ஜடேஜாவை தான் முதல் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது….!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here