அடுத்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் முக்கியமான ஐந்து வீரர்கள் இவர்கள் தான் ; முன்னாள் வீரர் உறுதி ;

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். அதில் இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் இப்பொழுது இறுதி போட்டியை எட்டி வருகின்றனர். இந்த ஆண்டு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் போன்ற அணிகள் தேர்வாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, நேற்று இரவு நடந்த முதல் தகுதி சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. அதனால் 29ஆம் தேதி நடைபெற உள்ள இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குஜராத். இந்த ஆண்டு யார் கோப்பையை வெல்ல போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

சென்னை , மும்பை அணிகள் :

இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இந்த முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. அது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும் கோப்பையை வென்றுள்ளனர்.

ஆனால் இந்த முறை சரியான அணி அமையாத காரணத்தால் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுதான் இரண்டாவது முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் ; இந்த ஆண்டு சென்னை அணிக்கு மிகவும் மோசமான ஆண்டாக தான் மாறியுள்ளது. ஆனால் அதில் 5 வீரர்கள் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால் அடுத்த ஆண்டு சென்னை அணிக்கு சாதகமாக அமையும் என்று கூறியுள்ளார் இர்பான்.

அதில் “டேவன் கான்வே, முகேஷ் சவுத்திரி, மதீஷா பத்திரான , மஹீஸ் தீசஹானா மற்றும் சிமர்ஜெட் சிங் போன்ற வீரர்கள் சென்னை அணிக்கு பாசிட்டிவ் ஆக உள்ளனர் என்று கூறியுள்ளார் இர்பான் பதான். இதில் தீபக் சஹார் இடத்தை சரியாக பயன்படுத்தியுள்ளார் முகேஷ் சவுத்திரி.

பின்னர் இறுதி இரு போட்டிகளில் மட்டுமே விளையாடிய மதீஷா பத்திரான நிச்சியமாக அடுத்த ஆண்டு இவரது முழுமையான ஆட்டம் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஓப்பனிங் பேட்ஸ்மேன் டேவன் கான்வே, இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்க போது சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அதன்பின்னர் சிறப்பாக விளையாடியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களே.! நீங்க சொல்லுங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமான வீரர் என்றால் யாராக இருக்கும் ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!