விராட்கோலி அடிக்கடி செய்த தவறை டூப்ளஸிஸ் இந்த முறை செய்யவில்லை ; அதனால் தான் ஆர்.சி.பி ப்ளே – ஆஃப் -ல் உள்ளது ; முன்னாள் வீரர் உறுதி ;

ஐபிஎல் 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகள் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற தொடங்கினால் இன்னும் விறுவிறுப்பாக நிகழ்வுக்கு பஞ்சம் இருக்காது என்பது தான் உண்மை.

இதுவரை வெற்றிகரமாக 14 சீசன் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது 15வது சீசன் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் அதுவும் நிறைவடைய போகிறது. அதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அதிலும் நேற்று நடந்த முதல் Qualifier சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி.

அதிலும் இறுதி லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியா ? அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியா ? என்ற குழப்பம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு டெல்லி அணி இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. அதில் வெற்றிபெற்றிருந்தால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.

தோல்வி பெற்றதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு நல்ல வாய்ப்பாக மாறியது தான் உண்மை. இதுவரை பெங்களூர் அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு முதல் விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

இருப்பினும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தை சரியாக பயன்படுத்தி டூப்ளஸிஸ் -ஐ கைப்பற்றி கேப்டனாக அறிவித்தது பெங்களூர் அணி. அதில் இருப்பினும் விராட்கோலி-க்கும் டூப்ளஸிஸ் -க்கும் ஒரு கேப்டனாக இருக்கும் வித்தியசங்களை தெரிவித்து வருகின்றனர்..!

அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்தர் சேவாக் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் மற்றும் டூப்ளஸிஸ் ஆகிய இருவரும் புதிய முறையில் அணியை வழிநடத்தி வருகின்றனர்.”

“விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணியில் நாம் பல போட்டிகளில் கவனித்த விஷயம், ஒரு வீரர் தொடர்ந்து 2 அல்லது 3 போட்டிகளில் விளையாடவில்லை என்றல் அவரை அணியில் இருந்து வெளியேற்றி வந்துள்ளார் விராட்கோலி. ஆனால் சஞ்சய் பங்கர் மற்றும் டூப்ளஸிஸ் ஆகிய இருவரும் அப்படி செய்யவில்லை.”

“பட்டிடரை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் மாற்றம் செய்யாமல் விளையாடி வருகின்றனர். ஒருவேளை இந்திய வீரர்கள் யாராவது பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்திருந்தால் நிச்சியமாக விராட்கோலி சொல்வதை அழுத்தம் காரணமாக செய்திருப்பார். இதுதான் டூப்ளஸிஸ் -யிடம் நடக்கவில்லை.”

சஞ்சய் பங்கர் மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் அணியை வழிநடத்தி வந்தனர். டூப்ளஸிஸ் அணியை வழிநடத்தி வருவதால் நிச்சியமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று குறியள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்.

கிரிக்கெட் ரசிகர்களே நீங்க சொல்லுங்க.! இந்த முறை டூப்ளஸிஸ் பெங்களூர் அணியை சிறப்பாக வழிநடத்தினாரா ? இல்லையா ?? இந்த முறை கோப்பையை வெல்லுமா பெங்களூர் அணி ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!