எங்கள் அணியின் முக்கியமான ஜோக்கர் இவர் தான் ; ரகசியத்தை உடைத்த டூப்ளஸிஸ்

0

Eliminator :

ஐபிஎல் டி-20 போட்டிகளின் லீக் சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. முதல் Qualifier சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடந்த Eliminator சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றுள்ளது.

நாளை நடைபெற உள்ள Qualifier 2 போட்டியில் டுப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளனர். இதில் யார் வெற்றி பெற போகிறார்களோ..! அவர்கள் தான் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இறுதி போட்டியில் விளையாட உள்ளனர்.

Eliminator போட்டியின் சுருக்கம் :

நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் டுப்ளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் விராட்கோலி மற்றும் டூப்ளஸிஸ் ஆகிய இருவரும் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை என்பது தான் உண்மை. ஆனால் ரஜத் படிடர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடினார்கள்.

அதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 207 ரன்களை அடித்தனர். அதில் விராட்கோலி 25, டூப்ளஸிஸ் 0, ரஜத் 112, மேக்ஸ்வெல் 9, தினேஷ் கார்த்திக் 37 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி.

என்னதான் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடினாலும் சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் 193 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி.

அதில் கே.எல்.ராகுல் 79, வோஹ்ரா 19, தீபக் ஹூடா 45,மார்கஸ் ஸ்டோனிஸ் 9 ரன்களை அடித்துள்ளனர். அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இப்பொழுது நாளை நடைபெற உள்ள Qualifier 2 போட்டிக்கு முன்னேறியுள்ளது.

போட்டி முடிந்த பிறகு பேசிய பெங்களூர் அணியின் கேப்டனான டூப்ளஸிஸ் கொடுத்த பேட்டியில் ; ” இன்றைய தினம் நிச்சியமாக ஒரு சிறந்த தினம். எங்கள் வீரர்களின் அதிரடியான மற்றும் அவர்களுது விளையாட்டு மிகவும் அருமையாக இருந்தது.எனக்கு தெரிந்து இவர் அடுத்த சதம் தான் சிறந்த ஒன்று.”

“இளம் வீரர் என்றால் இப்படி விளையாட வேண்டும் என்பதை நிரூபித்துள்ளார். எங்கள் பவுலர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்கு தெரியும். ரஜத் விளையாடிய அனைத்து ஷாட்ஸ்- களும் சிறப்பாக இருந்தது. அவரது அதிரடியான ஆட்டத்தால் எதிர் அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது.”

“இதனை ஒரு அணியாக கொண்டாடி வருகிறோம். இது ஒரு பெரிய போட்டியாகவே தெரியவில்லை. எங்கள் அணியில் ஹர்ஷல் பட்டேல் தான் ஜோக்கர். ஏனென்றால் அவரை போன்ற ஒரு முக்கியமான வீரர் நான் தேர்வு செய்தது. முக்கியமான நேரங்களில் பவுலிங் செய்து போட்டியை மாற்றியுள்ளார்.” என்று கூறியுள்ளார் டூப்ளஸிஸ்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் பெங்களூர் அணியால் கோப்பையை வெல்ல முடியுமா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here