என்னுடைய வாழ்கை முழுவதும் மாறியது இங்க தான் ; அது மட்டும் நடக்கவில்லை என்றால் அவ்வளவு தான் ; விராட்கோலி ஓபன் டாக் ;

0

சமீப காலமாக இந்திய அணியின் கேப்டன் பற்றிய சர்ச்சை பேச்சு தினம்தோறும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. ஆமாம்..! கடந்த ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு நான் டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அவரே கூறினார். அதில் இருந்து தொடங்கியது பிரச்சனை.

பின்னர் ஒருநாள் , டி-20 போட்டிக்கான கேப்டனாக ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார். பின்னர் வெறும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக மட்டுமே விராட்கோலி விளையாடி வந்துள்ளார். ஆனால் அதுவும் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. ஆமாம்..! சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை பெற்ற பிறகு நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார் விராட்கோலி.

இதுவரை யார் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் என்பதை பற்றி பிசிசிஐ அறிவிக்கவில்லை. இந்திய அணியின் அதிரடி வீரராக திகழும் ஒரே வீரராக வளம் வந்துள்ளார் விராட்கோலி. அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்து தான் இப்பொழுது இவ்வளவு பெரிய வீரராக இருந்திருக்க முடியும்.

அதுமட்டுமின்றி ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வந்துள்ளார். இதுவரை 14 சீசன் ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஒருமுறை கூட கோப்பையைகைப்பற்றியதே இல்லை. சமீபத்தில் விராட்கோலி அளித்த பேட்டியில் அவர் வாழ்க்கையில் சந்தித்த முக்கியமான நிகழ்வை பற்றி கூறியுள்ளார் ;

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஆமாம் ..! 2011ஆம் ஆண்டு டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றனர். அப்பொழுது பவுலிங் செய்யும் வீரர்களுக்கு சற்று தடுமாற்றம் இருந்தது. ஏனென்றால் இவர்கள் இருவரும் ஆட்டம் இழக்காமல் இருந்தால் அவர்களுக்கு பிரச்னை என்று.

ஒன்று மட்டும் தான் உண்மை, ,தினம்தோறும் நாம் எந்த அளவுக்கு வெளியாய் செய்கிறோம் என்பது தான் முக்கியம். உங்ககிட்ட எவ்வளவு பணம், புகழ் வேண்டுமானாலும் இருக்கட்டும் அது முக்கியமில்லை, நாம் செய்யும்வேளை தான் முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here