ஷிகர் தவானுக்கு பதிலாக இவங்க மூன்று வீரர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது ; வீரர் பட்டியல் இதோ ; இது நம்ம List-லையே இல்லையே பா…!!

0

வருகின்ற 6ஆம் தேதி முதல் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மோத உள்ளனர்.

சமீபத்தில் தான் 18 பேர் கொண்ட ஒருநாள் மற்றும் 18 பேர் கொண்ட டி20 போட்டிகளில் இடம்பெற போகும் இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அனைத்து வீரர்கள் ஒரே இடத்தில் இருக்கும் நிலையில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. அதில் ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற மூன்று வீரர்கள் தொற்று இருப்பது உறுதியானது.

அதனால் ஒருநாள் போட்டியில் விளையாடுவார்களா இல்லையா ??என்பது சந்தேகம் தான். சமீபத்தில் நடந்து முடிந்த சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு இடையேயான போட்டியில் ஷிகர் தவானின் ஆட்டம் மிகவும் அருமையாக இருந்தது தான் உண்மை. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் ஷிகர் தவானுக்கு பதிலாக யார் இடம்பெற போகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. அதற்கு மாற்றாக மூன்று வீரர்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. தீபக் ஹூடா இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது, இந்திய அணியில் அறிமுகம் ஆன தீபக், பேட்டிங் ஆல் ரவுண்டராக விளையாடி வருகிறார். தீபக் ஹூடா ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இல்லையென்றாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

மயங்க் அகர்வால் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அணியில் மயங்க் அகர்வால் இடம்பெறவில்லை. ஆனால் இந்திய அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தால் மயங்க் அகர்வால் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிரடியான ஓப்பனிங் வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி, டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால் ஷிகர் தவானுக்கு பதிலாக சிறப்பான மாற்றமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. வாஷிங்டன் சுந்தர் அடுத்ததாக இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. டி20 போட்டிகளில் அதிக முறை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி பவுலிங் ஆல் ரவுண்டராக வலம் வருகிறார் சுந்தர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here