இந்திய அணியில் இப்படிப்பட்ட வீரரா! வேற லெவல் …!! இவருடைய விளையாட்டை பார்த்து வாயடைத்து போனேன் ; முன்னாள் இங்கிலாந்து வீரர் நிக் நைட் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் வருகிறது. அதில் எந்த பாரபட்சமும் இல்லாமல் இளம் வீரர்களை தேர்வு செய்து வருகிறது பிசிசிஐ.

கடந்த இரு ஆண்டுகளில் அதிக புதிய வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் முகமது சிராஜ், ரிஷாப் பண்ட், சுமன் கில், பிருத்வி ஷாவ் போன்ற வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். எப்பொழுதும் ஒரு வீரரை பற்றி இன்னொரு வீரர் கூறுவது இயல்பு தான்.

அதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நிக் நைட் அளித்த பேட்டியில் ; முதலில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அருமையாக விளையாடியுள்ளார். சுமன் கில் விளையாடும் ஷாட்ஸ் மிகவும் அருமையாக விளையாடுவார். அவர் நிச்சியமாக அற்புதமான வீரராக உருமாறியுள்ளார். நான் ஒரு தலைபட்சமாக பேசவில்லை. நான் அவரை அண்டர் 19 உலகக்கோப்பை போட்டியில் இருந்து அவரை நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்பொழுது ஒரு போட்டி நடைபெற போது, ஒரு வீரர் பேட்டிங் செய்யும்போது ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் வைத்து பேட்ஸ்மேன் திறமையை பற்றி பேசவே முடியாது. ஆமாம்.. இங்கு அப்படித்தான் பலர் நினைத்து கொண்டு இருக்கின்றனர். நான் சுமன் கில் ஆட்டத்தை அண்டர் 19 உலகக்கோப்பை போட்டியில் இருந்து கவனித்து வருகிறேன். அதுமட்டுமின்றி, இந்திய அணியில், உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை பார்த்து கொண்டு வருகிறேன். அவருடைய விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதிலும் குறிப்பாக அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது, அதனை பார்த்தால் வாவ் என்று தான் எனக்கு தெரிகிறது என்று கூறியுள்ளார் நிக் நைட். சுமன் கில் சமீபத்தில் நியூஸிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுமன் கில் முதல் முதலில் பார்டர் கவாஸ்கர் போட்டியில் அறிமுகம் ஆகிய மூன்று போட்டிகளில் 259 ரன்களை அடித்துள்ளார்.