நான் திரும்ப வந்துட்டான்னு சொல்லு ..! மறுபடியும் ஆரம்பிக்கலாமா என்று பதிவு செய்த சென்னை அணியின் புதிய கேப்டன் ;

0

நான் திரும்ப வந்துட்டான்னு சொல்லு ..! மறுபடியும் ஆரம்பிக்கலாமா என்று பதிவு செய்த சென்னை அணியின் கேப்டன் ;

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த போட்டி ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றதால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் போட்டிகள். இதுவரை மொத்தம் 15 சீசன் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது 16 சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரம் நேற்று அனைத்து அணிகளும் வெளியிட்டுள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து கடந்த ஆண்டு வரை மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் :

இதுவரை நான்கு முறை சாம்பியன் படத்தை வென்ற சென்னை அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் இரு தினங்களுக்கு முன்பு ரவீந்திர ஜடேஜாவை நியமித்தது சென்னை நிர்வாகம். பின்பு சென்னை அணி போட்டிகளில் வெற்றிபெற முடியாமலும், ரவீந்திர ஜடேஜாவின் தனிப்பட்ட விளையாட்டிலும் பிரச்சனை ஏற்பட்ட காரணத்தால் மீண்டும் தோனியை கேப்டனாக அறிவித்தது சென்னை அணி.

அதன்பிறகு ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2022 தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார். அதுமட்டுமின்றி, சென்னை அணி செய்த பதவிக்கு அவ்வப்போது ரிப்ளை செய்த அனைத்து பதிவுகளையும் டெலிட் செய்தது சென்னை ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை ரவீந்திர ஜடேஜா அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளில் விளையாடுவாரோ என்று பல வதந்திகள் எழுந்து கொண்டே தான் இருந்தது.

ஆனால் நேற்று சென்னை அணி வெளியிட்ட தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றுள்ளது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதனை தொடர்ந்து நேற்று ரவீந்திர ஜடேஜா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மறுபடியும் ஆரம்பிக்கலாம் என்று தோனிக்கு தலைவணங்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

தோனிக்கு ஓய்வு அறிவித்த பிறகு நிச்சியமாக ரவீந்திர ஜடேஜா தான் கேப்டனாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணி தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரம்:

மகேந்திர சிங் தோனி, டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுபிரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜேவர்தன் ஹங்காரகேகர், பிரிட்டோரிஸ், மிச்சேல் சண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்திரி, பாதிரான, சிங், தீபக் சஹார், மஹீஸ் தீக்ஷானா போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளது சென்னை அணி. இன்னும் 20.45 கோடி மீதமுள்ள நிலையில் சரியான வீரர்களை தேர்வு செய்தால் நிச்சியமாக இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் அளவிற்கு சிஎஸ்கே அணி வலுவாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here