எங்களை பார்த்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பவுலர்கள் பயந்துவிட்டார்கள் ; ஷோயிப் மாலிக் ;

0

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

சீரியஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் வலுவான அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அதற்கு எதிர்மாறாக நடந்துள்ளது. லீக் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதி சுற்றில் மோசமான நிலையில் படுதோல்வியடைந்துள்ளது.

அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய 168 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க வீரர்களை ஜோஸ் பட்லர் மற்றும் ஹேல்ஸ் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை விளாசினார்கள். அதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது இங்கிலாந்து அணி.

ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாத நிலையில் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு இப்பொழுது எதிர்பார்க்காத அளவிற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றனர். இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி தான் வெல்லும் என்று பலர் அவரவர் கருத்துக்களை கூறி வந்தனர். ஆனால் இங்கிலாந்து அணி வென்று உலகக்கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி பெற்ற பிறகு இந்திய அணியை விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் மாலிக் இந்திய அணியை வேண்டுமென்று விமர்சனம் செய்துள்ளார். இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் மோசமான நிலையில் இருக்கும்பட்சத்தில் அதனை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் சோயிப் மாலிக் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் இறுதி போட்டியில் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 157 ரன்களை அடித்தனர். பின்பு 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. ஆனால், இறுதி ஓவர் வரை விளையாடிய பாகிஸ்தான் அணி 152 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது இந்திய.

அதில் ” நான் யார் என்று சொல்ல விரும்பவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பவுலர்கள் அனைவரிடமும் ஒவ்வொரு ஓவர்கள் மீதம் இருந்தது. அப்பொழுது தோனி அனைத்து பவுலர்களிடன் இறுதி ஓவர் பவுலிங் செய்ய சொன்னார். ஆனால் அனைத்து பவுலர்களும் அதனை மறுத்துவிட்டனர். அதற்கு முக்கியமான காரணம் அப்பொழுது பாகிஸ்தான் வீரர் மிஸ்பா -உல் -ஹக் எதிராக பவுலிங் செய்ய இந்திய பவுலர்கள் அஞ்சினார்கள்.”

“இறுதி ஓவரில் 13 ரன்களை அடிக்க வேண்டியிருந்தது. அப்பொழுது மிஷாப் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்தார். ஒருவேளை அது விக்கெட் மட்டும் இருந்திருந்தால் நிச்சியமாக அதிரடியாக விளையாடிருப்பார். இறுதி ஓவரில் சிக்ஸர் அடித்து பறக்கவிட்டார் என்று கூறியுள்ளார் சோயிப் மாலிக்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here