மீண்டும் சென்னை அணியிக்கு திரும்ப போகும் ; சின்ன தல ரெய்னா..! ஆனால் இந்த முறை ப்ளேயர் இல்லை ; உற்சாகத்தில் ரசிகர்கள் ;

0

ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தகவலை வெளியிட்டுள்ளனர். அதனால் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் வெளியிட்டு வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளில் வென்ற அணியாகும், அதிகமுறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாகவும் சென்னை அணி திகழ்கிறது. இந்த அணியை ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து மகேந்திர சிங் தோனி தான் சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். இதுவரை மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் 2020ல் கொரோனா காரணமாக இந்தியாவிற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற போட்டியில் சுரேஷ் ரெய்னா தனது குடும்ப பிரச்சனை காரணமாக அந்த தொடரில் இருந்தே விலகினார். பின்பு ஐபிஎல் 2021ல் எதிர்பார்த்த அளவிற்கு விளையாத காரணத்தால் ப்ளே -ஆஃப் சுற்றில் இருந்து ரெய்னாவை வெளியேற்றினார்கள். அதன்பின்னர் சென்னை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலத்தில் இடம்பெற்ற சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் கைப்பற்ற காரணத்தால் இப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். மீண்டும் சுரேஷ் ரெய்னாவை சென்னை அணியில் பார்த்துவிட முடியாத என்று சென்னை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

சமீபத்தில் ரவீந்திர ஜடேஜா செய்த பதிவிற்கு பதிலளித்த சென்னை அணி எப்பொழுதும் என்றென்றும் என்று பதிவு செய்திருந்தனர். அது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் சுரேஷ் ரெய்னாவும் சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது குடும்பம் போல என்று பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அனுபவம் வாய்ந்த சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை அணியில் வீரராக இல்லாவிட்டாலும் ஒரு பயிற்சியாளராக நியமனம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு 2020ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு 2022 செப்டம்பர் 6ஆம் தேதி அன்று ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here