இந்த 2 வீரர்கள் மட்டும் இல்லையென்றால் இந்திய அணி கோப்பையை வென்றிருக்கும் ; ரசிகர்கள் ஆவேசம் ;

0

இனிமேல் கிரிக்கெட் போட்டி காண்பது தவறான விஷயம் என்ற அளவிற்கு ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதற்கு முக்கியமான காரணம் இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதி போட்டி தான் முக்கியமான காரணம்.

ஆமாம், இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. அதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இதில் இந்திய கிரிக்கெட் அணியால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாதது ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகிய இருவரும் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பெரியதாக ரன்களை அடிக்கவில்லை.

ரோஹித் சர்மா மேல் வைத்த நம்பிக்கை வீணாக போயிட்டது :

ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வரும் ரோஹித் சர்மா, இதுவரை மொத்தம் 5 முறை கோப்பையை பெற்று கொடுத்துள்ளார். டி-20 போட்டிகளில் வெற்றிகரமான கேப்டனாக திகழும் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டன் ஆனால் நிச்சியமாக உலகக்கோப்பையை வென்று கொடுப்பார் என்று ரசிகர்கள் அதிகமாக நம்பினார்கள்.

கடந்த ஆண்டு இறுதியில் விராட்கோலி டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் ரோஹித் சர்மா தான் டி-20 போட்டிக்கான கேப்டன் என்ற அறிவித்தனர். பல ஆண்டுகளாக உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கும் இந்திய அணி, நிச்சியமாக ரோஹித் சர்மா தலைமையில் வெல்லும் என்று நினைத்து கொண்டு இருந்தனர்.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களையும் அடிக்காமல் திணறினார் ரோஹித் சர்மா. அதுமட்டுமின்றி, இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் இல்லையென்றால் நிச்சியமாக உலகக்கோப்பையை வென்றிருக்கலாம் என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த உலகக்கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா மொத்தமாகவே 116 ரன்களையும், கே.எல்.ராகுல் 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் இடம்பெற வேண்டுமென்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here