இதற்கு மேல் என்ன நடந்தாலும் இவரை மட்டும் இந்திய அணியில் இருந்து ஒதுக்க முடியாது ; ரசிகர்கள் உறுதி

இந்திய அணியின் முக்கியமான வீரர் இவர் தான், இனிமேல் இவருடைய இடம் நிச்சியமாக இந்திய அணியில் இருக்கும். இதுதான் கம்பேக் என்று ரசிகர்கள் புகழ்ந்து பேசிக்கொண்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியான வீரராக திகழ்ந்த ஆல் – ரவுண்டர் தான் ஹார்டிக் பாண்டிய. இவர் 2015ஆம் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகம் ஆகி அருமையாக விளையாடியதை எடுத்து 2016ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

அதிலும் இருந்து முக்கியமான வீரராக ப்ளேயிங் 11ல் சிறப்பாக விளையாடி வந்துள்ளார் ஹார்டிக். ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு ஹார்டிக் பாண்டியாவால் சரியாக பவுலிங் மற்றும் பேட்டிங் செய்ய முடியாமல் போனது. இவர் ஒரு பவுலிங் ஆல் -ரவுண்டர்.

இருப்பினும் சில நாட்கள் கழித்து வெறும் பேட்டிங் மட்டுமே செய்து வந்தார் ஹார்டிக்பாண்டிய. ஆனால் அதிலும் பெரிய அளவில் ஒன்றும் விளையாடவில்லை. இதற்கு மேல் அவ்வளவு தான் என்று யோசித்த போது உலகக்கோப்பை டி-20 2021 போட்டிக்கான இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியவை தேர்வு செய்தது பிசிசிஐ.

அது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே பேசிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. அதில் இருந்து இந்திய அணி விளையாடிய இலங்கை, தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற சீரியஸ் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது.

இதனை பற்றி ஹார்டிக் பாண்டியவிடம் பிசிசிஐ கேள்வி கேட்டது. அதற்கு பதிலளித்த பாண்டிய,நான் முழுமையாக பவுலிங் செய்யும் அவரை என்னை அணியில் கைப்பற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார். அதனை அடுத்து ஐபிஏல் 2022யில் சிறப்பாக விளையாடி வருகிறார் ஹார்டிக் பாண்டிய.

அதுமட்டுமின்றி, இந்த முறை ஹார்டிக் பாண்டிய குஜராத் அணியின் கேப்டனாக திகழ்ந்து வருவது மட்டுமின்றி, ஆல் – ரவுண்டர் என்பதை நிரூபித்துவிட்டார். ஆமாம், இதுவரை ஹார்டிக் பாண்டிய விளையாடிய 5 போட்டிகளில் 228 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 87 ரன்களை குவித்துள்ளார்.

இதனை பற்றி ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்களே நீங்க சொல்லுங்க, இந்திய அணியின் முக்கியமான ஆல் – ரவுண்டராக ஹார்டிக் பாண்டிய கம்பேக் கொடுப்பாரா இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!