இனிமேல் இவர் தொடக்க வீரர் இல்லை ; இந்திய அணியின் நம்பிக்கையான மிடில் ஆர்டர் இவர் தான் ; ரசிகர்கள் மகிழ்ச்சி ;

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த ஒருநாள் போட்டிகளில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது இந்திய.

இரண்டாவது போட்டியின் விவரம் :

நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்கவிட்டாலும், அனைத்து வீரர்களும் குறைவான ரன்களை அடித்தனர். அதனால் 39.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 215 ரன்களை அடித்தனர். அதில் பெர்னாண்டோ 20, நுவானிடு பெர்னாண்டோ 50, மெண்டிஸ் 34, அசலாங்க 15, வெல்லலாஜ் 32 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

பின்பு 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு வெற்றி காத்திருந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, சுப்மன் கில் , விராட்கோலி போன்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்டிக் பாண்டிய, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் 43.2 ஓவர் முடிவில் 219 ரன்களை அடித்த இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட்டை வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றுள்ளது.

இவர் தொடக்க வீரரா ? ஆனால் மிடில் ஆர்டரில் பட்டைய கிளப்புறார் :

இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக பார்ட்னெர்ஷிப் செய்து வரும் கே.எல்.ராகுல், இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் கே.எல்.ராகுலின் பங்களிப்பு மோசமான நிலையில் தான் இருந்தது.

அதனால் அவர் தொடக்க வீரராக விளையாட தகுதி இல்லை என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக விளையாடுவாரா ? இல்லையா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இனிவரும் போட்டிகளில் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தான் விளையாடுவார். அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பலமான மிடில் ஆர்டர் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் இடம்பெற்ற கே.எல்.ராகுல் 28, 64* ரன்களை அடித்துள்ளார்.