இதை பற்றி தோனி என்னிடம் முன்பே சொல்லவிட்டார் ; ஆனால் இப்பொழுது கடினமாக தான் உள்ளது ; ரவீந்திர ஜடேஜா ஓபன் டாக் ;

0

ஐபிஎல் 2022 : ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் தொடங்கி சில நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை வெற்றிகரமாக 13 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் சென்னை அணி மொத்தம் 3 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியை பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால் இந்த தொடக்கத்தில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அதன்பின்னர் ரவீந்திர ஜடேஜா அணியை வழிநடத்தி வருகிறார். ஒருவேளை ரவீந்திர ஜடேஜா எடுக்கும் முடிவுகள் தான் போட்டியின் தோல்விக்கு காரணமா இருக்குமோ ?? சமீபத்தில் ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்…..!

அதில் ” தோனி என்னிடம் சில மாதங்களுக்கு முன்பே கேப்டன் பற்றி பேசினார். அதில் இருந்து நான் அதற்கு தயாராகி கொண்டே தன இருந்தேன். ஒரு அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என்று பல யோசனைகள் இருந்தன. ஆனால் எந்தவிதமான அழுத்தமும் என்னிடம் இல்லை.”

“என்னுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதனை மட்டுமே நான் செய்வேன்”. மேலும் ருதுராஜ் கெய்க்வாட் பற்றி பேசிய கேப்டன் ஜடேஜா ; ” இல்லை இல்லை, அவர் ஒரு திறமையான வீரர் தான். ருதுராஜ் -க்கு சரியான தருணம் இன்னும் அமையவில்லை, அதனால் தான் இந்த தடுமாற்றம். “

“நிச்சியமாக அவருக்கு ஆதரவாக தான் நாங்கள் இருப்போம். கூடிய விரைவில் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி, துபே சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். மூன்று போட்டிகளில் இரு போட்டிகளில் அருமையாக விளையாடியுள்ளார்.”

எங்கள் அணிக்கு கீ ப்ளேயர் ஆக விளையாட போவது துபே தான். நிச்சியமாக நாங்கள் செய்த தவறை யோசித்து, அதற்கு ஏற்ப இனிவரும் போட்டிகளில் விளையாட போகிறோம் என்று கூறியுள்ளார் சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா. சென்னை வருகின்ற சனிக்கிழமை மதியம் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை மோத உள்ளது.

அதில் ஆவது சென்னை அணி வெற்றி பெற்று கம்பேக் கொடுக்குமா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here