கூடிய விரைவில் இந்திய அணியில் அனைத்து போட்டிகளிலும் இவர் உறுதியாக விளையாடுவார் ; ஜோஸ் பட்லர் பேட்டி ;

ஐபிஎல் 2022 போட்டிகளில் எதிர்பாராத பல விஷயங்கள் நடைபெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு புள்ளிபட்டியலில் கீழ் இருந்த அணிகள் இந்த முறை முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.

நேற்று இரவு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 169 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 70, படிக்கல் 37, ஹெட்மயேர் 42 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி. தொடக்க வீரர்கள் டூப்ளஸிஸ் 29, அனுஜ் ராவத் 26 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர். பின்பு விராட்கோலி (5), டேவிட் (0) மற்றும் ருத்தேர்போர்ட் (5) அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக மாறியது போட்டி. ஆனால் தினேஷ் கார்த்திக் மற்றும் அகமத் போன்ற இருவரும் அதிரடியாக விளையாடி பெங்களூர் அணியை வெற்றி பெற வைத்துள்ளனர். அதனால் 19.1 ஓவர் முடிவில் 173 ரன்களை அடித்த நிலையில் வெற்றியை கைப்பற்றியுள்ளது பெங்களூர்.

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர் கூறுகையில் ; “எங்கள் அணியின் பவுலர் பிரஷித் கிருஷ்ணா சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். அவருக்கு இருக்கும் திறமை நிச்சியமாக இந்திய அணியில் அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட போகிறார்.”

“அவரது பவுலிங் தனிவிதமான ஒன்று. நிச்சியமாக இந்திய அணியில் வெற்றிகரமான பவுலராக பிரஷித் கிருஷ்ணா இருப்பார் என்று கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்”. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிரஷித் கிருஷ்ணா 3 போட்டிகளில் விளையாடிய 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

பிரஷித் கிருஷ்ணா கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய இந்திய அணியில் விளையாடி வருகிறார். 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டையும், 54 டி-20 போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் பிரஷித்.