முதல் போட்டியில் சென்னை அணிக்கு சாதகமாக இருக்கும் சில விஷயங்கள் ; சிஎஸ்கே அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்க ?

போட்டி 1 : இன்று இரவு முதல் தொடங்க உள்ளது ஐபிஎல் டி-20 2022 போட்டிகள். அதில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளனர்.

இதுவரை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் அதிகபட்சமாக 27 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் 17 போட்டிகளில் சென்னை அணியும், 10 கொல்கத்தா அணியும் வென்றுள்ளது. இன்றைய முதல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் ?? சென்னை அணிக்கு இருக்கும் நம்மை என்ன ? தீமை என்ன ?

சென்னை அணிக்கு இருக்கும் நல்ல விஷயம் :

இந்த முறை ஐபிஎல் மெகா ஏலம் நடந்து முடிந்துள்ளது. மற்ற அணிகளை காட்டிலும் சென்னை அணியில் பழைய வீரர்களை குறிவைத்து கைப்பற்றியுள்ளது சென்னை. ஆமாம் அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, ஆசிப், ப்ராவோ , மிச்சேல் சண்ட்னர் போன்ற வீரர்களை ஏலத்தில் கைப்பற்றியது சென்னை.

அதுமட்டுமின்றி மகேந்திர சிங் தோனி, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ருதுராஜ் போன்ற வேரார்ஹளை தக்கவைத்துள்ளது சென்னை அணி. அதனால் 8 வீரர்கள் மீண்டும் சென்னை அணியில் இருப்பதால் வீரர்களை பற்றி புரிந்து கொண்டு அவரால் எப்படி விளையாடுவார்கள் என்பதை விரைவாக புரிந்து கொள்ள முடியும்.

சென்னை அணியில் இருக்கும் பிரச்சனை :

பேட்டிங், ஆல் – ரவுண்டர் போன்ற விஷயங்கள் சிறப்பாக இருந்தாலும் பவுலிங் எந்த அளவிற்கு இருக்க போகிறது என்பது தெரியவில்லை. ஆமாம், கடந்த ஆண்டு சென்னை அணி ஷர்டுல் தாகூர், தீபக் சஹார் போன்ற முன்ணனி வீரர்கள் அணியில் விளையாடி வந்தனர்.

ஆனால் இந்த முறை மெகா ஏலத்தில் ஷர்டுல் தாகூர் 10.75 கோடி கொடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி கைப்பற்றியது. தீபக் சஹாரை அதிகபட்சமாக 14 கோடி விலை கொடுத்து கைப்பற்றியது சென்னை அணி. இருப்பினும் தீபக் -க்கு காயம் ஏற்ப்பட்ட காரணத்தால் ஐபிஎல் 2022 போட்டிகளில் முதல் பாதி விளையாட்டில் விளையாட போவதில்லை என்று உறுதியான தகவல் வெளியானது.

இன்றைய போட்டியில் வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!