இவர் அணியில் இருந்தால் நாங்க ஏன் சூரியகுமார் யாதவை தேர்வு செய்ய போகிறோம் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.

இன்று மதியம் 1:30 மணியளவில் சென்னை அணியில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனால் வெற்றியை கைப்பற்ற வேண்டுமென்று தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

மோசமான நிலையில் விளையாட இரண்டாவது ஒருநாள் போட்டி :

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் மோசமாக அமைந்தது. 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் வெறும் 117 ரன்களை அடித்தனர்.

ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 121 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்றது. இதில் நம்பிக்கை நாயகனாக சூர்யகுமார் யாதவ் ஆட்டம் ரசிகர்கள் இடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.

ஆமாம், இதில் ஒருநாள் போட்டிக்கான தொடரில் இடம்பெற்ற சூர்யகுமார் யாதவ் இரு போட்டிகளிலும் எந்த ரன்களையும் அடிக்காமல் விக்கெட்டை இழந்தார். அப்படி இருக்கும் நிலையில் ஏன் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது ? என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது.

இதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா : “இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் எப்பொழுது இந்திய அணிக்கு திரும்புவார் என்று யாருக்கும் தெரியாது. இப்பொழுது அந்த இடம் காலியாக இருப்பதால் சூரியகுமார் யாதவை விளையாட வைத்தோம்.”

“உண்மையிலும் சூரியகுமார் யாதவ் வெல்ல பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இருப்பினும் 50 ஓவர் போட்டிகளில் சிறிது ரன்களை அடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று என்று நான் பல முறை சொல்லியுள்ளேன் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

டி-20 போட்டிகளில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் மட்டும் சூரியகுமார் யாதவால் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடிவதில்லை.

சூரியகுமார் யாதவ் இறுதியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட அரைசதம் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற வேண்டுமா ???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here