உலகக்கோப்பை போட்டியில் முன்னணி வீரரான இவர் அணியில் இருக்க போவதில்லை ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகள் சிறப்பான நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் 2 – 2 என்ற கணக்கில் இரு அணிகளும் வென்ற காரணத்தால் தொடர் ட்ரா ஆனது.

அதனை தொடர்ந்து இப்பொழுது டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

உலகக்கோப்பை போட்டி 2022:

இந்த ஆண்டு உலகக்கோப்பை 2022 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால் இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டுமென்று நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் பல இளம் வீரர்கள் இந்திய அணியில் உள்ள நிலையில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதை ஒவ்வொரு போட்டியிலும் கவனித்து வருகின்றனர். அதனால் எந்த வீரர் கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திகராறோ, அவர்களுக்கு தான் உலகக்கோப்பை போட்டிக்கான வாய்ப்பு கிடைக்கும்.

அதில் விராட்கோலி-க்கு இடம் கிடைக்குமா ?

கடந்த ஒரு ஆண்டுகளாக விராட்கோலி விளையாடியது பெரிய அளவில் பேசப்படவில்லை. பெரும்பாலான போட்டிகளில் 20,30 ரன்களை அடித்த நிலையில் ஆட்டத்தை இழந்து வருகிறார். இதே நிலைமை தொடர்ந்தால் உலகக்கோப்பை போட்டியில் இடம் கிடைக்குமா ?

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் கூறுகையில் ; “நிச்சியமாக இந்தியா அணியில் விராட்கோலி இருப்பார், அதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது விளையாட்டு நிச்சியமாக சிக்கலாக இருக்கலாம். ஏனென்றால் ஐபிஎல் போட்டிகளிலும் ஸ்ட்ரைக் ரேட் இல்லை.”

“ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்லும் அளவிற்கு இப்பொழுது விராட்கோலி இல்லை. அதனால் தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ஏனென்றால் அவரால் (தீபக்) பவுலிங் செய்ய முடியும். இருப்பினும் நிச்சியமாக விராட்கோலி இன்னும் சில போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்படும்.”

“அதில் அவரது விளையாட்டை வைத்து தான் முடிவுகள் எடுக்கப்படும். ஏனென்றால் இந்திய அணியில் பல இளம் வீரர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியிலும் பலர் அவரது விளையாட்டை கேள்வி எழுப்பினர். அதனால் அவரது விளையாட்டை நிச்சியமாக கவனிக்க வேண்டும்.”

அதற்கான நான் விராட்கோலி-ஐ இந்திய அணியில் இருந்து வெளியேற்ற சொல்லவில்லை. ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில அவரது பங்கு பெரிய அளவில் இருக்க வேண்டும். இந்தியாவில் பல வீரர்கள் இதே நிலைமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அதேபோல தான் விராட்கோலி-யும் மீண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார் வாசிம்.”