விராட்கோலி இல்லை ; இந்திய அணியில் இவரது பங்களிப்பு எப்பொழுதும் முக்கியமான ஒன்று ; ரோஹித் சர்மா ஓபன் டாக்

கடந்த இரு நாட்களுக்கு முன்பு தொடங்கியது இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி. இந்த போட்டி மொஹாலி-யில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்துள்ளது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய போவதாக கூறினார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ்-முடிவில் ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளனர். ஆமாம், 574 ரன்களை அடித்து 8 விக்கெட்டை இழந்த நிலையில் Declare செய்தது இந்திய. அதில் ரோஹித் சர்மா 29, மயங்க் அகர்வால் 33, ஹனுமா விஹாரி 58, விராட்கோலி 45, ரிஷாப் பண்ட் 96, ஷ்ரேயாஸ் ஐயர் 27, ரவீந்திர ஜடேஜா 175, ரவிச்சந்திரன் அஸ்வின் 61, ஜெயந்த் யாதவ் 2 மற்றும் ஷமி 20 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கியது. அதில் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் வெறும் 174 ரன்களை மட்டுமே அடித்தனர். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் மிகவும் அதிகமாக இருந்த காரணத்தால் இலங்கை அணியை இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாட தொடங்கினார்கள்.

அதிலும் இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தான் உண்மை. இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 178 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் ஒரு இன்னிங்ஸ் பேட்டிங் செய்யாமல் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வீரரை பற்றி சில கருத்தை பகிர்ந்துள்ளார். அதில் ” கிரிக்கெட் போட்டியில் ஒரு உயரத்தை அடைவது அவ்வளவு சுலபம் இல்லை, ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் அதனை அடைந்துள்ளார்.”

டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று விளையாடும் போது யாரும் இதனை பற்றி யோசிக்கவே மாட்டார்கள். நாம் சிறப்பாக விளையாடினால் சாதனைகளும் நம்முடன் வந்து கொண்டே இருக்கும். நான் இப்பொழுது இல்லை, நீண்ட ஆண்டுகளாக ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலிங்கை பார்த்து கொண்டே வருகிறேன். அவர் எப்பொழுது சிறப்பாக பவுலிங் செய்து கொண்டே வருகிறார் என்று கூறியுள்ளார் ரோஹித்.”

அதிக விக்கெட்டை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலை பற்றி பேசிய இந்திய அணியின் ரோஹித் சர்மா கூறுகையில் ; “எனக்கு அதில் எப்போதும் அஸ்வின் இடம்பெறுவர் என்று நன்கு தெரியும்.ஏனென்றால் ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட நாட்களாக இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.”

“ஒரு சில போட்டிகளில் அவர் (ரவிச்சந்திரன் அஸ்வின்) தான் போட்டியின் வெற்றிநாயகனாக இருப்பார். அதனால் எனக்கு அவர் தான் சிறந்த பவுலர். கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெவேறு கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் எனக்கு அவர் தான் சிறந்த பவுலர் என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா.”