மொஹாலி-யில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்த நிலையில் 574 ரன்களை அடித்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இலங்கை அணி 174 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் இந்திய அணி அதிக ரன்கள் வைத்திருந்த காரணத்தால் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் இலங்கை அணி முதல் பேட்டிங் செய்தது.
அதிலும் 178 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது இலங்கை அணி. அதனால் இந்திய அணிக்கு சுலபமான வெற்றியாக மாறியது தான் உண்மை. முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு முக்கியமான கரணம் ரவீந்திர ஜடேஜா, ரிஷாப் பண்ட் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா : புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரின் இடத்தில் யார் விளையாட போகிறார்கள் ? அதிலும் 3வது இடத்தில் சுமன் கில் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும். சுமன் கில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் இல்லை, அவருக்கு 3வது இடம் தான் சரியாக இருக்கும்.
அதுமட்டுமின்றி, என்னை பொறுத்தவரை ஷ்ரேயாஸ் ஐயர் 3வதாகவும், ஹனுமா விஹாரி 5வது இடத்திலும் விளையாட வேண்டும். அதனால் ஓப்பனிங் ரோஹித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால், 3வது ஷ்ரேயாஸ் ஐயர் , 4வது விராட்கோலி, 5வைத்து ஹனுமா விஹாரி, 6வதாக ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் களமிறங்கினால் இந்திய அணிக்கு சிறப்பாக ஆட்டம் அமையும்.

7வதாக ஜடேஜா , அவரை அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற வேண்டும். ஒருவேளை அஸ்வின் இல்லையென்றால் அவருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் இடம்பெற வேண்டும். என்ன பொறுத்தவரை அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் நிச்சியமாக இடம்பெற வேண்டும்.
அதில் முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா போன்ற மூன்று வீரர்கள் நிச்சியமாக இருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா.
0 Comments