இவரை பார்த்தால் கிரிக்கெட் விளையாட வந்தது போல தெரியவில்லை.. ; சேவாக் கருத்து … யார் அந்த வீரர் தெரியுமா ?

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் அவரது கருத்தை கூறியுள்ளார்….!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் , ஈயின் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் பவுலிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இறுதிவரை நல்ல ஒரு பார்ட்னெர்ஷிப் கிடைக்காததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்த நிலையில் 154 ரன்களை எடுத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் அடித்த ரன்களின் விவரம் : நிதிஷ் ரானா 15 ரன்கள், சுமன் கில் 43 ரன்கள், ராகுல் த்ரிப்பதி 19 ரன்கள், ஈயின் மோர்கன் 0 ரங்கள், நரேன் 0 ரன்கள், ஆன்ட்ரே ரசல் 45 ரன்கள், தினேஷ் கார்த்திக் 14 ரன்கள், பேட் கம்மின்ஸ் 11 ரன்களை விளாசியுள்ளார்.

பின்பு 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி அதிரடியாக விளையாடி 16.3 ஓவர் முடிவில் 156 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றினார். டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பிருத்வி ஷாவ் மற்றும் தவானின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றியை சுலபமாக கைப்பற்ற முடிந்தது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் விவரம் ; பிருத்வி ஷாவ் 82 ரன்கள், ஷிகர் தவான் 46 ரங்கள், ரிஷாப் பண்ட் 16 ரன்கள், மார்கஸ் ஸ்டோனிஸ் 6 ரன்களை எடுத்தால் நிலையில் வெற்றியை கைப்பற்றியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

இப்பொழுது புள்ளிபட்டியலில் 10 புள்ளிகளுடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், தோல்வி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சேவாக் அளித்த பேட்டி ஒன்றில் இந்த போட்டியை பற்றி பேசியுள்ளார்; அதில் ப்ரித்வி ஷாவ் 41 பந்தில் 82 ரன்களை அடித்து விளாசியுள்ளார். அதனை பற்றி பேசிய சேவாக் ; ஒரு ஓவர் முழுவதும் சரியான நேரத்தில் பவுண்டரி அடிப்பது மிகவும் கடினம்.

இதுநாள் வரை நான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக இருந்த போது அதிகபட்சமாக 18 அல்லது 20 ரன்களை மட்டுமே ஒரு ஓவரில் தொடர்ந்து அடித்துள்ளேன். ஒருபோதும் 6 பந்தில் 6 பவுண்டரி அல்லது 6 சிக்சர் அடித்ததே இல்லை. பிருத்வி ஷாவ் ஒரு அற்புதமான வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

U-19 அணியில் இருக்கும்போது சிவம் மாவி பந்து வீச்சு அவருக்கு நான்கு பழக்கப்பட்டு இருக்கலாம். அதனால் தான் 6 பந்தில் 6 பவுண்டரி என்று நினைக்க கூடும், ஆனால் நானும் தான் ஆஷிஷ் நெஹ்ரா பயிற்சியின் போது பல முறை அவரது பந்தை எதிர்கொண்டுள்ளேன்.

ஆனால் அதே பந்து போட்டியின் வரும்போது நான் இவ்வாறு ஒருபோதும் தொடர்ந்து பவுண்டரிகளை அடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும், என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.