விராட்கோலியின் சாதனையை முறியடித்த CSK வீரர் ; ஆனால் இந்த ஆண்டு CSK அணியில் தக்கவைக்கப்படவில்லை ; ரசிகர்கள் வருத்தம் ;

ஐபிஎல் : 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் டி-20 போட்டிக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தன. அதனால் ஆண்டுதோறும் எந்த விதமான தடங்கலும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 15 சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் இப்பொழுது 16வது சீசன்களில் அடியெடுத்து வைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2022ல் புதிதாக இரு அணிகளை அறிமுகம் செய்த பிசிசிஐ மெகா ஏலத்தை நடத்தினர். ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை, வருகின்ற டிசம்பர் 26ஆம் தேதி அன்று கேரளாவில் மினி ஏலம் நடத்த போவதாகவும், தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

இதுவரை நடந்து முடிந்த 15 சீசன்களில் மொத்தம் 4 முறை கோப்பையை கைப்பற்றிய பெருமை சென்னை அணிக்கு தான். அதுமட்டுமின்றி, ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தான் தலைமை தாங்கி வருகிறார். சமீபத்தில் தான் ஐபிஎல் 2023ல் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரத்தையும், தக்கவைத்துக்கொள்ளாத வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டது சென்னை அணி.

அதில் பலர் எதிர்பார்த்த வீரர்களும், சில வீரர்கள் எதிர்பாராத வகையில் வெளியேற்றியுள்ளனர். அதில் தமிழக வீரராக ஜெகதீசன் சென்னை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதனால் ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலத்தில் பங்கேற்க போகிறார். நிச்சியமாக யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிகவிலைக்கு விற்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி என்ன செய்தார் தமிழக வீரரான ஜெகதீசன் ?

நேற்று நடந்த விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேஷ் அணியும் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 506 ரன்களை விளாசினார்கள். அதில் சென்னை அணியின் முன்னாள் வீரரான ஜெகதீசன் அதிரடியாக விளையாடிய 141 பந்தில் 277 ரன்களை அடித்துள்ளார். பின்பு 507 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அருணாச்சல பிரதேஷ் அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது.

ஒருவர் கூட பார்ட்னெர்ஷிப் செய்யாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த காரணத்தால் 10 விக்கெட்டை இழந்த அருணாச்சல பிரதேஷ் அணி 71 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 435 ரன்கள் வித்தியாசத்தில் அருணாச்சல பிரதேஷ் அணியை வீழ்த்தியது தமிழ்நாடு.

விராட்கோலி 2008- 2009ஆம் ஆண்டுகளில் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் அதிகபட்சமாக 4 சதம் தான் அடித்துள்ளார். ஆனால் தமிழக வீரரான ஜெகதீசன் 5 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெகதீசனை சென்னை அணியில் இருந்து வெளியேற்றியது சரியா ? தவறா ?? சென்னை அணியில் ஜெகதீசனுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதா ? உங்கள் கருத்து என்ன ?