இந்த மாதிரியான போட்டிகளில் தான் ஒரு சிலர் வீரர்களை பற்றி தெரியவரும் ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

நேற்று நைப்பர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், டிம் சௌதி தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு வழக்கம் போல தொடக்க ஆட்டம் பெரிய அளவில் அமையவில்லை. ஆனால் கான்வே மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் நியூஸிலாந்து அணிக்கு ரன்கள் சேர்ந்தனர். சரியாக 19.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நியூஸிலாந்து அணி 160 ரன்களை அடித்தனர்.

அதில் பின் அலென் 3, டேவன் கான்வே 59, சாப்மேன் 12, க்ளென் பிலிப்ஸ் 54, டேரில் மிச்சேல் 10 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. வழக்கம் போல தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. ரிஷாப் பண்ட் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் தலா 10 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தனர்.

அதுமட்டுமன்றி ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். ஆனால் கேப்டனான ஹர்டிக் பாண்டிய 18 பந்தில் 30 ரன்களை விளாசினார். சரியாக 9 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி 75 ரன்களை அடித்திருந்தனர். தீடிரென்று எதிர்பாராத வகையில் மழை பெய்த காரணத்தால் போட்டி நடைபெற முடியாமல் போனது. DLS முறைப்படி போட்டியை tied செய்தனர். அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றுள்ளது.

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டனான ஹர்டிக் பாண்டிய கூறுகையில் : ” இந்த போட்டி முழுமையாக விளையாடி வெல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இருந்தாலும் நாங்க தான் தொடரை வென்றுள்ளோம். அவர்களாவது பவுலிங் அட்டாக் மிகவும் சிறப்பாக இருந்தது. 10 – 15 ரன்களை அதிகமாக அடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு இந்திய தள்ளப்பட்டது. முதலில் சில விக்கெட்டை இழந்தாலும், இது போன்ற போட்டிகளில் தான் அணியில் இருக்கும் வீரர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதை பார்க்க முடியும். அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் மழை பெய்ததை யாராலும் தவிர்க்கவே முடியாது என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”

இந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியாவின் பங்களிப்பு தான் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்திய அணியின் தொடக்க ஆட்டம் தொடர்ந்து மோசமான நிலையில் தான் இருக்கிறது. யார் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடினால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்து என்ன ?