இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் 2021 தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2021யின் முதல் சில போட்டிகளில் மக்கள் யாரும் மைதானத்தில் அனுமதி இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது.
கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல மோசமான போட்டிகளை எதிர்கொண்டு பல தோல்விகளை சந்தித்ததால், ப்ளே -ஆஃப் சுற்றுக்குள் நுழைய தகுதி பெறவில்லை. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்கு அதுவே முதல் முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறியது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே அணியின் வீரர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அதனால் இந்த ஆண்டு நிச்சியமாக கோப்பை கைப்பற்ற வேண்டும் என்று முடிவு செய்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அவரும் ,அவருடன் இணைந்து ராபின் உத்தப்பா, கிருஷ்ணப்ப கவுதம் ஆகிய வீரர்கள் பயிற்சியை தொடங்கினார்.
மும்பைக்கு சென்ற சிஎஸ்கே அணியின் வீரர்கள் தீவிரமான பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் புதிய ஆடையை தல தோனி அதனை அறிமுகப்படுத்தினார். அந்த விடியோவை சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி & பதில் என்ற பதிவை அவர் பதிவு செய்திருந்தார். அதற்கு பல கிரிக்கெட் ரசிகர்கள் பல கேள்விகளை ஆகாஷ் சோப்ராவிடம் கேட்கப்பட்டது. அதில் ஒரு கேள்வியாக சிஎஸ்கே அணியில் எந்த வெளிநாட்டு வீரர்கள் சிஎஸ்கே எதிர்கொள்ளும் போட்டிகளில் விளையாட வாய்ப்பு இருக்கிறது ?
அதற்கு பதிலளித்த ஆகாஷ் சோப்ரா.. சாம் கரண் ,டுபலஸிஸ், இம்ரான் தாஹிர், நிகிடி அல்லது பிராவோ என்சரு கூறியுள்ளார். அப்படி பார்த்தால், நிகிடியால் முதல் போட்டியில் பங்கேற்க முடியாது. ஒருவேளை இவர் சொன்ன இந்த நான்கு வீரர்கள் சரிதானா??? புதிதாக அணியில் இணைந்த மெயின் அலி அணியில் இருக்க மாட்டாரா??? என்ற கேள்வியை சிஎஸ்கே ரசிகர்கள் எழுப்புகின்றனர்.
வருகின்ற மார்ச் 10ஆம் தேதி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்கொள்ள போகிறது.