இந்திய பேட்ஸ்மேனா ? அல்லது வெளிநாட்டு பவுலரா ? சென்னை அணியில் ஏற்பட்ட மிகப்பெரிய குழப்பம் ; தோனி எடுக்க போகும் முடிவு ?

0

ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் வருகின்ற சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதற்கு முக்கியமான காரணம் இந்த முறை 10 அணிகளை கொண்டு விளையாட உள்ளது ஐபிஎல் 2022.

ஆமாம், கடந்த ஆண்டு வரை 8 அணிகளுடன் விளையாடி வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது..!

ஐபிஎல் ஏலம் முடிந்த சில நாட்களில் சென்னை அணிக்கு தொடங்கியது பிரச்சனை. ஆமாம், கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2021 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் படத்தை வென்றதற்கு முக்கியமான காரணமே ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் என்று சொல்லலாம்.

ஏனென்றால் ருதுராஜ் மற்றும் டுப்ளஸிஸ் ஆகிய இருவரும் இணைந்து ரன்களை அடித்த தொம்சம் செய்தனர். ஆனால் டுப்ளஸிஸ் ஐ- ஏலத்தில் விட்டது சென்னை. இருப்பினும் அவரை கைப்பற்ற அனைத்து முயற்சிகளும் நடைபெற்றது ஆனால் இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவர் (டூப்ளஸிஸ்) ஐ-கைப்பற்றியது.

அதனால் இப்பொழுது ஓப்பனிங் பேட்ஸ்மேன்னாக ருதுராஜ் கெய்க்வாட்-டுடன் பார்ட்னெர்ஷிப் செய்ய போகும் வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது..! அதுமட்டுமின்றி, சென்னை அணி அதிகபட்சமாக 14 கோடி விலை கொடுத்து வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹாரை கைப்பற்றியுள்ளனர்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய தீபக் சஹாருக்கு பலமாக காயம் ஆனது. அதனால் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் தீபக். பின்னர் ஐபிஎல் போட்டியில் ஆவது விளையாடுவாரா ?? இல்லையா ?/ என்று பல கேள்விகள்எழுந்துள்ளது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீபக் சஹார் நிச்சியமாக முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லை. ஆனால் பாதி போட்டிக்கு மேல் நிச்சியமாக விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பேட்ஸ்மேன் மடக்கிரும் ஒரு பவுலர் பிரச்சனை உள்ளது.

ஒருவேளை சென்னை அணி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ராபின் உத்தப்பா களமிறங்கினால் பின்னர் தீபக் சஹாருக்கு பதிலாக நிச்சயமாக ஒரு வெளிநாட்டு வீரர் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் ராபின் உத்தப்பா, டேவன் கான்வே போன்ற இருவரில் ஒருவர் தான் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்ய போகின்றனர்.

ராபின் உத்தப்பா சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தீபக் சஹாருக்கு பதிலாக யார் இடம்பெற போகிறார் ? ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் தீபக் சஹாருக்கு பதிலாக யார் விளையாட போகிறார்கள் ?

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here