இந்திய அணியின் முன்னாள் வீரரான மகேந்திர சிங் தோனி , கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னோடியா இருக்கிறார் என்பதில் சதேகமில்லை. அதுமட்டுமின்றி, உலக அளவில் தோனிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது தான் உண்மை.
கடந்த ஆண்டு செப்டம்பர் 2020 அவர் சர்வதேச போட்டியில் இருந்து விலகுவதாக கூறினார். அதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அவர் இன்னும் எந்த தகவலையும் சொல்லவில்லை.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா பல ஆண்டுக்கு முன் தோனியை பற்றி சொன்ன கருது இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அப்படி என்ன சொன்னார் ?? தோனியை பற்றி ?? முழு விவரம் இதோ :
2015ஆம் ஆண்டு உலக்கோப்பை போட்டியின் போது இஷாந்த் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவரால் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் அவர் தோனியை பற்றி நல்ல தகவலை கூறியுள்ளார். அதில், தோனி என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான மனிதர்.
அவர் எனக்கு அதிக அளவில் ஆதரவு கொடுத்துள்ளார். அதனால் அவர் என்னை 24வது மாடியில் இருந்து குதிக்க சொன்னாலும் குதிப்பேன். ஏனென்றால் தோனி எப்பொழுதும் நன்மையை மட்டுமே மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பர். அதனால் தான் அவரை அதிக ரசிகர்களுக்கு பிடித்துள்ளது என்று கூறியுள்ளார் இஷாந்த் சர்மா.
இஷாந்த் சர்மா 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட தொடங்கினார். இப்பொழுது வரை 104 டெஸ்ட் போட்டிகளிலும், 80 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளில் இப்பொழுது டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற செப்டம்பர் 19 ஆம் தேதி மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்கவுள்ளது.