வீடியோ : பா..! செம பேட்டிங் ; ஆஸ்திரேலியா அணியை திணறடித்து இந்திய அணி ; சூப்பர் ஓவரில் தீரில் வெற்றி ;

நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணியும், ஹர்மன்ப்ரீட் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான ஹீலி பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தார். ஆனால் மூனே மற்றும் தலிய இருவரும் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை விளாசினார்கள். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 187 ரன்களை அடித்தனர். அதில் ஹீலி 25, மூனே 82*, தாலிய 70* ரன்களை அடித்துள்ளனர். பின்பு 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்க ஆட்டம் பெரிய அளவில் அமைந்தாலும், பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே சென்றனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 187 ரன்களை அடித்த இந்திய கிரிக்கெட் அணி போட்டியை ட்ரா செய்தனர். அதில் ஸ்மிரிதி மந்தன 79, ஷாபாலி வர்மா 34 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். போட்டி ட்ரா ஆன காரணத்தால் சூப்பர் ஓவர் நடைபெற்றது.

சூப்பர் ஓவர் விவரம் :

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 பந்தில் 1 விக்கெட்டை இழந்த நிலையில் 20 ரன்களை விளாசினார்கள். அதிலும் இந்திய அணியின் வீராங்கனை ஸ்மிரிதி மந்தன தான் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார். பின்பு 21 ரன்களை அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது ஆஸ்திரேலியா அணிக்கு தோல்வி மிஞ்சியது. ஏனென்றால், 16 ரன்களை மட்டுமே அடித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி. அதனால் இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியா அணியை வென்றுள்ளனர்.

ஐந்து டி -20 போட்டிக்கான தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளனர். இன்னும் மீதமுள்ள மூன்று போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி இரு போட்டிகளில் வென்றே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடரை கைப்பற்றுமா இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ?