ஆல் – ரவுண்டரை கைவிட்ட சென்னை அணி ; இனி மூத்த வீரர்களுக்கு BYE-BYE ; சிஎஸ்கே அணி Youngsters அணி தான் ; தக்கவைக்கப்பட்ட முழு லிஸ்ட் இதோ ;

0

ஐபிஎல் 2022 போட்டிகள் நடந்து முடிந்து நான்கு மாதங்கள் ஆகிய நிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான பேச்சு தொடங்கியுள்ளது.

ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலத்தை வருகின்ற டிசம்பர் மாதம் நடத்த போவதாவும் பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் ரசிகர்கள் எதிர்பார்த்த ரிட்டன்ஸன் லிஸ்ட் ஐ- ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டுள்ளனர். அதில் சென்னை அணியும் வெளியிட்டு லிஸ்ட்-ல் முன்னணி ஆல் – ரவுண்டர் இல்லாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆமாம், ஐபிஎல் தொடர்களில் அதிக முறை போட்டிகளில் வென்ற அணியும், அதிகமுறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து 2008 தோனி தான் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இதுவரை நான்கு ஆண்டுகள் சாம்பியன் படத்தை வென்றுள்ளனர். கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலும், பின்பு 2018ஆம் ஆண்டு முதல் 2022வரையிலும் சென்னை அணியின் முக்கியமான ஆல் -ரவுண்டராக விளையாடி வந்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ப்ராவோ.

கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் 4.4 கோடி விலை கொடுத்து கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 39வயதான ப்ராவோ -வை இந்த ஆண்டு சென்னை அணி தக்கவைத்துக்கொள்ளாமல் வெளியேற்றியதால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெற்று கொண்டு இருக்கும் நேரத்தில் ப்ராவோ -வை பற்றி பேசிய தோனி கூறுகையில் ; ” எனக்கும் அவருக்கும் அதிகமான சண்டை வரும். அதுமட்டுமின்றி, நான் சொல்லும்படி பவுலிங் செய்யவே மாட்டார். அவர் சக வீரர் மட்டுமின்றி, ப்ராவோ ஒரு சகோதரர் போல தான் எனக்கு என்று கூறியுள்ளார் தோனி.”

இப்படி இருக்கும் நிலையில் ப்ராவோ -வை தக்கவைக்காமல் வெளியேற்றியது சரியான முடிவு தான ? ஒருவேளை வயது காரணமாக வெளியேற்றிருப்பார்களோ ? ஐபிஎல் 2023 போட்டிகளில் விளையாட சென்னை அணி தக்கவைத்து கொண்ட வீரர்களின் பட்டியல் இதோ ;

எம்.எஸ்.தோனி, டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சூப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜேவர்தன் ஹங்காரகேகர், ரவீந்திர ஜடேஜா, மிச்சேல் சண்ட்னர், பிரிடோரிஸ், தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்திரி, மஹீஸ் பாத்திரன, தீபக் சஹார், சோலங்கி, மஹீஸ் தீக்ஷனா போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு ஐபிஎல் 2023 முழுவதும் சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக வழிநடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஐபிஎல் 2023 தான் தோனிக்கு இறுதி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here