கேப்டனையே உதறித்தள்ளிய ஐபிஎல் அணி ; அப்போ யார் தான் அடுத்த கேப்டன் ? குழப்பத்தில் ரசிகர்கள் ;

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் இன்னும் நான்கு மாதங்களில் நடைபெற உள்ளது. அதனால் அதற்கான நடவடிக்கையில் அனைத்து அணியும், பிசிசிஐ கையில் எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.

அதனால் நேற்று மாலை நேரத்தில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளனர். அதில் சில எதிர்பார்த்தபடியும், சில வீரர்கள் எதிர்பாராத வகையில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக அணியில் இருந்து கேப்டனைவே வெளியேற்றியது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி.

சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி :

கடந்த சில ஆண்டுகளாகவே சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் கேப்டன் பற்றிய சர்ச்சை எழுந்து கொண்டே தான் இருக்கிறது. ஐபிஎல் 2021ல் டேவிட் வார்னர் தான் கேப்டனாக வழிநடத்தி கொண்டு வந்தனர். ஆனால் சன்ரைசர்ஸ் அணி மோசமான தோல்விகளை பெற்று புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் இருந்த காரணத்தால் உடனடியாக அவருக்கு (வார்னர்) பதிலாக கேன் வில்லியம்சன் -ஐ கேப்டனாக அறிவித்தது சன்ரைசர்ஸ் அணி.

கேப்டன் மாற்றத்தால் ஏதாவது நல்ல விஷயம் நடைபெற்றதா என்று கேட்டால் ? இல்லை. கேன் வில்லியம்சன் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை தான் பெற்று வந்தனர். பின்பு கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் இருந்து வெளியேறிய நிலையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை கைப்பற்றியுள்ளது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதால், தக்கவைத்து கொள்ளும் வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் வெளியிட்டு வருகின்றனர். அதில் கேப்டனான கேன் வில்லியம்சன் -ஐ வெளியேற்றியுள்ளது. அதனால் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். உலக கிரிக்கெட் போட்டிகளில் Haters இல்லாத வீரர்களில் கேன் வில்லியம்சனும் ஒன்று தான் என்பதில் சந்தேகமில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி முன்னணி வீரராக திகழும் புவனேஸ்வர் குமார் தான் இனிவரும் ஐபிஎல் கேப்டனாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரம் :

அப்துல் சமத், அடென் மார்க்ரம், ராகுல் த்ரிப்தி, க்ளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்கோ ஜென்சென், வாஷிங்டன் சுந்தர், கார்த்திக் தியாகி, புவனேஸ்வர் குமார், நடராஜன், உம்ரன் மாலிக். சன்ரைசர்ஸ் அணிக்கு யார் கேப்டனாக இருந்தால் சிறப்பாக இருக்கும் ? கடந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் வென்று 8வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.