யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது ; இதனை சரி செய்து கொண்டு இருக்கிறோம் ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

0

நியூஸிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் வருகின்ற 18ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் தான் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதனால் முன்னணி வீரர்களான விராட்கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற வீரர்களுக்கு நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் கேப்டனாக இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் (ஹர்டிக் பாண்டிய) தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்த உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது தான் உண்மை.

ஏனென்றால், அதற்கு முன்பு நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி நிச்சியமாக உலகக்கோப்பையை வென்று விடும் என்று தான் அனைவரும் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான செமி -பைனல் போட்டியில் இந்திய அணியால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் மோசமான நிலையில் வெளியேறியது. அதனால் இதுவரை இல்லாத அளவிற்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

அதேபோல தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் “எனக்கு தெரிந்து கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தான் மிகக் குறைவான செயல்திறன் கொண்ட அணி என்று கூறியுள்ளார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் ஹர்டிக் பாண்டிய கூறுகையில் ; “சரியாக விளையாடவில்லை என்றால் இது போன்ற கருத்துக்கள் வர தான் செய்யும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ரசிகர்ளுக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் எழும், அதனை நான் மதிக்கிறேன். அதுமட்டுமின்றி, மாற்றங்கள் இந்திய அணியை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பது மிகவும் அவசியம்.”

“சர்வதேச போட்டிகளில் விளையாடும் நாங்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியது இல்லை. இது ஒரு விளையாட்டு, அதனால் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் போது தான் முன்னேற்றத்தை பார்க்கமுடியும். இருந்தலும் அணியில் ஒரு சில இடங்களில் வேலை செய்ய வேண்டியுள்ளது. நிச்சியமாக அதனை சரி செய்துவிட்டு முன்னேறிச்செல்வோம் என்று கூறியுள்ளார் ஹர்டிக்.”

மேலும் அடுத்த டி-20 உலகக்கோப்பை பற்றி பேசிய ஹர்டிக் பாண்டிய : “நிச்சியமாக இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தோல்வி பெற்றது மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால் நங்கள் கிரிக்கெட் போட்டியை நன்கு அறிந்தவர்கள். நான் எப்படி வெற்றியை எதிர்கொள்கிறோமோ, அதேபோல தான் தோல்வியையும் கடந்து செல்ல வேண்டும். செய்த தவறை திருத்திக்கொண்டு முன்னேறி செல்ல வேண்டும்.”

“அடுத்த உலகக்கோப்பை போட்டிகளுக்கு இன்னும் இரு ஆண்டுகள் இருக்கிறது. உண்மையை சொல்ல போனால் இன்னும் நிறைய நேரம் நம்மிடம் இருக்கிறது. அதற்கிடையில் முடிந்தவரை அதிகப்படியான போட்டியில் விளையாட முடியும். இப்பொழுதில் இருந்தே இந்தியா அணியின் வெற்றிப்பாதைக்கு உண்டான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஹர்டிக் பாண்டிய கூறியுள்ளார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here