வீடியோ ; சென்னை அணியை வீழ்த்தியதால் லக்னோ அணியின் ஆலோசகர் கம்பிர் செய்த செயல் வைரலாக பரவி வருகிறது ;

போட்டி 7: நேற்று நடந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். இந்த போட்டி மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

அதில் சென்னை அணி முதலில் களமிறங்கி ரன்களை அடித்து தொம்சம் செய்தனர். ஆனால் அது சென்னை அணிக்கு சாதகமாக இல்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 210 ரன்களை அடித்தது சென்னை. ஆனால் லக்னோ அணிக்கு சிறப்பாக பார்ட்னெர்ஷிப் அமைந்த காரணத்தால் 19.3 ஓவர் முடிவில் ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றினார்கள்.

அதனால் ஐபிஎல் போட்டிகளில் லக்னோ அணி முதல் போட்டியில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. ஆனால் சென்னை அணி இரு போட்டிகளிலும் தோல்வியை பெற்றுள்ளது சென்னை. அடுத்த போட்டியில் ஆவது சென்னை அணி வெற்றி பெறுமா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

நேற்று நடந்த போட்டியில் சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் லக்னோ அணியின் லெவிஸ் மற்றும் படோனி போன்ற இரு பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தனர். லக்னோ அணியை வெற்ற பெற்றதால் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் லக்னோ அணியின் ஆலோசகராக அறிமுகமாகியுள்ளார் கவுதம் கம்பிர்.

அவரது வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

மேலும் போட்டி முடிந்த பிறகு கவுதம் கம்பிர் அளித்த பேட்டியில் ; “எங்கள் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் படோனியை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்ட போட்டியை வைத்து முடிவு செய்ய முடியாது. படோனி திறமையான வீரர் தான், அதனால் தான் இன்னும் அவர் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கிறார்.

நாங்கள் தான் இவரது திறமையை அறிந்து அவருக்கு (படோனி ) க்கு வாய்ப்பு கொடுத்தோம்.இவரது ஆட்டத்தை அதிக நாட்களாக பார்த்து கொண்டே இருக்கிறோம்.அவருக்கு முக்கியமான வேலை அவரது நிலைப்பாட்டை சரியாக வழிநடத்த வேண்டும் என்று கூறியுள்ளார் கம்பிர்.