ரவீந்திர ஜடேஜாவுக்கு இடையூறாக இருப்பது இவர் தான் ; அதனால் தான் ஜடேஜாவால் போட்டியை வழிநடத்த முடியவில்லை ; முன்னாள் வீரர் உறுதி ;

நேற்று நடந்த போட்டியில் பல சர்ச்சை மற்றும் பல குழப்பங்கள் எழுந்துள்ளன. நேற்று மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக ராபின் மற்றும் ருதுராஜ் ஆகிய இருவரும் களமிறங்கினார்கள். எதிர்பாராத விதமாக ருதுராஜ் ஆட்டம் இழந்தாலும், ராபின் உத்தப்பா அதிரடியான ஆட்டத்தை விளையாடி ரன்களை குவித்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் ஐ-தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் ரன்களை அடித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 210 ரன்களை அடித்தது சென்னை அணி. இது பெரிய ரன்கள் தான் சென்னை அணி தான் வெல்லும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தன.

ஆனால் எதிர்பாராத விதமாக லக்னோ அணிக்கு தொடக்கத்தில் இருந்து ஒன்று மாற்றி ஒன்றாக பார்ட்னெர்ஷிப் சிறப்பாக அமைந்து கொண்டே இருந்தது. அதனால் 19.3 ஓவர் முடிவில் 211 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றியை கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில் சென்னை அணி அதிக ரன்கள் அடித்தும் தோல்வியை சந்தித்த காரணத்தால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தோல்வியை பற்றி அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய ஐயின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா கூறுகையில் ;

“இன்றைய போட்டியில் நடந்த ஒரு விஷயம் மிகவும் தவறாக தெரிகிறது. என்னை விட தோனி ரசிகன் வேறு யாரும் இருக்க முடியாது.இப்பொழுது தோனி ஓய்வு பெற போகிறார் என்றால் இது அவருக்கு மிகவும் முக்கியமான போட்டிதான். ஆனால் முதல் போட்டியில் எதவும் செய்யாதா தோனி , இரண்டாவது போட்டியில் இப்படி செய்வது சரியாக தெரியவில்லை. “

“இதில் நான் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆதரவாக பேசவில்லை. ஒரு கிரிக்கெட் ரசிகனாக இது வித்தியாசமாக தெரிகிறது. ஜடேஜா பவுண்டரி லைனில் நின்று கொண்டு இருந்தார். தோனி அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.”

“தோனி இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இருப்பினும் அவர் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் செய்த செயல் நிச்சயமாக ஜடேஜாவுக்கு இடையூறாக தான் இருந்திருக்கும். அதுமட்டுமின்றி, ஜடேஜாவின் மன உறுதியை அது நிச்சியமாக பாதித்திருக்கும் என்று கூறியுள்ளார் அஜய் ஜடேஜா.”

நேற்று சென்னை அணி 18வது ஓவரில் பவுலிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் அழுத்தம் ஏற்பட்டது. அப்பொழுது ஜடேஜா பவுண்டரி லைனில் இருந்தபடி தோனி தான் அணியை வழிநடத்தினார் என்பதில் சந்தேகமில்லை.