210 ரன்கள் அடித்தும் தோல்வி பெற்றதற்கு இவர் செய்த தவறு மட்டும் தான் ; CSK கேப்டன் ரவீந்திர ஜடேஜா பேட்டி ;

0

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தொங்கியது. இதுவரை 7 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று நடந்து முடிந்துள்ளது. நேற்று ப்ராபோர்னே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய சென்னை அணிக்கு மிகவும் மோசமான தோல்வி ஏற்பட்டுள்ளது.

ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு முதல் போட்டியை காட்டிலும் இரண்டாவது போட்டியில் சிறப்பான பேட்டிங் அமைந்தது தான் உண்மை.

அதனால் நிர்ணயிக்கப்பட 20 ஓவர் முடிவில் 210 ரன்களை அடித்தது சென்னை. அதில் ராபின் உத்தப்பா 50, ஷிவம் 49, மொயின் அலி 35 போன்ற ரன்களை அடித்துள்ளனர். பின்பு 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி.

ஆரம்பத்தில் இருந்து சிறப்பான ஆட்டத்தை விளையாடிய லக்னோ அணி 19.3 ஓவர் முடிவில் 211 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது. சென்னை அணி என்னதான் பேட்டிங் செய்து அதிக ரன்களை அடித்தாலும், பவுலிங் -கில் சொதப்பியது சென்னை அணி…!

போட்டி முடிந்த பிறகு பேசிய ஜடேஜா ; மறைமுகமாக சில கருத்துக்களை கூறியுள்ளார். அதில் “சென்னை அணி பேட்டிங் எல்லாம் சிறப்பாக தான் செய்தது, அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பவுலிங் செய்த சென்னை அணி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. “

“அதுமட்டுமின்றி ஒரு போட்டி என்று வந்துவிட்டால், பீல்டிங் செய்வது, சரியான நேரத்தில் கேட்ச் செய்வதும் மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் அதில் நாங்க சில தவறுகளை செய்துவிட்டோம். அதனால் தான் எங்களால் அவரது விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் போனது என்று கூறியுள்ளார் ஜடேஜா. “

சென்னை அணி பவுலிங் செய்து கொண்டு இருந்த போது சரியாக 5வது ஓவரை ப்ராவோ பவுலிங் செய்தார். அப்பொழுது எதிர்கொண்ட டி-காக், அடித்த பந்து சரியான மொயின் அலி கைக்கு சென்றது. ஆனால் எதிர்பாராத விதமாக அதனை தவறவிட்டார். 30 ரன்களில் ஆட்டம் இழக்க வேண்டிய டி-காக் 61 ரன்களை அடித்துள்ளார். (ஜடேஜா பேசியது இதை பற்றியாக தான் இருக்கும்)

கிரிக்கெட் ரசிகர்களே நீங்க சொல்லுங்க, சென்னை அணியின் இந்த தோல்விக்கு என்ன தான் காரணமாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here