பெங்களூர் ரசிகர்களை கடுப்பேற்றிய கம்பிர் ; இணையத்தை கலக்கும் வீடியோ :

0

ஐபிஎல் 2023 : நேற்று இரவு நடந்த 15வது போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது. அதனால் நிர்ணயிக்கப்பட 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த பெங்களூர் அணி 212 ரன்களை விளாசியது. அதில் அதிகபட்சமாக விராட்கோலி 61, டூப்ளஸிஸ் 79, மேக்ஸ்வெல் 59, தினேஷ் கார்த்திக் 1 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு தீரில் வெற்றி காத்திருந்தது. ஆமாம், தொடக்க வீரர்களான மயேர்ஸ் , கே.எல்.ராகுல், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்தனர். அதனால் லக்னோ அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இருப்பினும் மிடில் ஆர்டர் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரான் போன்ற வீரர்கள் ரன்கள் குவிந்தது. இருப்பினும் இரு ஓவர் வரை விக்கெட்டை இழந்த நிலையில் விளையாடிய லக்னோ அணி இறுதி பந்தில் 1 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது லக்னோ.

அதுவும் 1 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வென்றது லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி. அதில் கே.எல்.ராகுல் 18, தீபக் ஹூடா 9, ஸ்டோனிஸ் 65, பூரான் 62, படோனி 30, ஜெயதேவ் உனட்கட் 9 ரன்களை அடித்துள்ளனர். வெற்றியை கைப்பற்றிய லக்னோ அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்திலும், பெங்களூர் அணி 7வது இடத்திலும் உள்ளனர்.

கடுப்பான கம்பிர் :

இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னஸ்வாமி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது போட்டி. அதனால் லக்னோ அணியை காட்டிலும் பெங்களூர் அணிக்கு தான் ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்பொழுது விக்கெட்டை கைப்பற்றிய போதெல்லாம் விராட்கோலி, சிராஜ் போன்ற வீரர்கள் ஆக்குரோசமாக அவரவர் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதனை மனதில் வைத்துக்கொண்ட கம்பிர், இறுதியாக தீரில் வெற்றி பெற்றவுடன் மைதானத்திற்குள் சென்ற கம்பிர் ரசிகர்களை பார்த்து உஷ் என்று சைகைகாட்டியுள்ளார். இதனால் பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றனர். இதன்வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here