வீடியோ : யார் சாமி இவரு இப்படி வெறித்தனமாக Sound போடுறாரு ; அவளோ கோபம் போல ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் டி-20 2023 போட்டிக்கான தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கிய. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது.

நேற்று பெங்களூரில் உள்ள சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கே.எல்.ராகுல் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அதிரடியான பேட்டிங் அமைந்தது. ஆமாம், லக்னோ அணியால் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் திணறினார்கள். வெறும் மூன்று விக்கெட்டை இழந்த பெங்களூர் அணி 212 ரன்களை அடித்து தொம்சம் செய்தனர்.

இதில், விராட்கோலி 61, டூப்ளஸிஸ் 79*, மேக்ஸ்வெல் 59, தினேஷ் கார்த்திக் 1* ரன்களை அடித்தனர். பின்பு 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி. தொடக்க வீரரான மயேர்ஸ், குர்னல் பாண்டிய, தீபக் ஹூடா போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் பின்னடைவு ஏற்பட்டது.

இதையும் படியுங்க :” பெங்களூர் ரசிகர்களை கடுப்பேற்றிய கம்பிர் ; இணையத்தை கலக்கும் வீடியோ :

இருப்பினும் கே.எல்.ராகுல் மட்டும் நிதானமாக விளையாடி கொண்டு வந்தனர். பின்பு அவரும் (ராகுல்) விக்கெட்டை இழந்த பின்பு பூரான் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் லக்னோ அணிக்கு ஆறுதலாக இருந்தது.

இருப்பினும் விக்கெட்டை தொடர்ந்து இழந்து வந்த லக்னோ அணியால் ரன்களை அடிக்க முடியாமல் போனது. இருப்பினும் இறுதி ஓவரில் இறுதி பந்தில் ஒரு ரன்கள் ஓடி பெங்களூர் அணியை 1 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி.

பெங்களூர் அணி எப்பொழுதும் பவுலிங் செய்தால் விக்கெட்டை கைப்பற்றினால் விராட்கோலி, சிராஜ், ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்கள் ஆக்குரோசமாக அவரவர் சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள். இதனை கவனித்து கொண்டே வந்துள்ளார் லக்னோ அணியின் ஆலோசகரான கம்பிர் பொறுமையாக இருந்தார்.

பின்பு இறுதி பந்தில் ஒரு ரன் ஓடி தீரில் வெற்றியை கைப்பற்றியதால் கடுப்பான கம்பிர் அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதிலும் கேமராவில் முதலில் விராட்கோலியை காட்டிய பின் கம்பிரை காட்டியதால் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பெங்களூர் அணி 2 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் இருக்கின்றனர். அதனால் பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.