விராட்கோலி-க்காக கங்குலி செய்த செயலால் அதிர்ச்சியால் கிரிக்கெட் ரசிகர்கள் ; இப்படியெல்லாம் செய்யமாட்டாரே ; முழு விவரம் இதோ ;

0

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், டி-முத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணியும் நேற்று காலை 9:30 மணியளவில் தொடங்கியது முதல் டெஸ்ட் போட்டி. அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

முதல் நாள் முடிவில் 357 ரன்களை அடித்த நிலையில் 6 விக்கெட்டை இழந்தது இந்திய அணி. இருப்பினும் இந்த டெஸ்ட் போட்டி என்பது விராட்கோலிக்கும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் மிகவும் முக்கியமான போட்டியாகும். ஆமாம், ஏனென்றால் விராட்கோலி-க்கு பிறகு ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்தும் முதல் டெஸ்ட் போட்டி இது.

அதேபோல விராட்கோலி-க்கும் இது முக்கியமான போட்டியாகும். ஏனென்றால் இது விராட்கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாகும். இப்பொழுது உலகம் முழுவதும் கொரோனா தொற்று இருப்பதால் அதிக அளவில் எந்த போது இடங்களிலும் கூட்டம் கூட வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் கூறியது.

இப்பொழுது இந்தியாவில் தாக்கம் குறைவாக இருந்தாலும் சில முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது இந்திய அரசு. இருப்பினும் 100வது டெஸ்ட் போட்டி என்றால் அது ஒவ்வொரு வீரருக்கும் முக்கியமான ஒன்றாகும். அதுவும் விராட்கோலி இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தி பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார்.

அதனால் அவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் 100வது டெஸ்ட் போட்டியில் மக்கள் அனுமதிக்கபட்டுள்ளனர். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிசிசிஐ தலைவரான கங்குலி கூறுகையில் ; முதலில் எந்த ரசிகர்களும் மைதானத்தில் அனுமதி இல்லை என்று தான் சொன்னார்கள்.”

“ஆனால் அது விராட்கோலியின் 100வது டெஸ்ட் போட்டி என்ற காரணத்தால் எந்த விதமான தடையும் இன்றி அரசு சொல்லும் படி ரசிகர்கள் மைதானத்தில் அனுமதி கொடுத்துள்ளோம். பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் சில கட்டுப்பாடுகளுடன் ரசிகர்கள் அனுமதி கொடுத்தனர். பின்னர் நான் ராஜிந்தர் குப்தாவிடம் பேசி எந்த தடையும் இன்றி ரசிகர்கள் அனுமதி கொடுத்ததாக கூறியுள்ளார் கங்குலி.

இது கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆமாம்..! ஏனென்றால் பிசிசிஐ- கங்குலிக்கும் விராட்கோலி-க்கும் இடையே ஏற்பட்ட கேப்டன் சர்ச்சையை எந்த கிரிக்கெட் ரசிகராலும் மறக்கவே முடியாது என்பது தான் உண்மை. ஏனென்றால் விராட்கோலி தானாகவே நான் டி-20 போட்டிக்கான கேப்டன் பதிவியில் இருந்து விலக போவதாக கூறினார்.

ஆனால் அதற்கு பின்னர் ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன், டி-20 போட்டிக்கு என்று தனி தனி கேப்டன் இருக்க கூடாது என்று பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் தேர்வாளர்கள் முடிவு செய்தனர். அதனால் விராட்கோலி-க்கு கூட முன்கூட்டியே சொல்லாமல், ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து உன்னை வெளியேற்ற போவதாக தீடிரென்று கூறியுள்ளதாக விராட்கோலி கூறினார். அது மிகப்பெரிய சர்ச்சையானது.

இப்படி இருக்கும் நிலையில் எப்படி விராட்கோலியின் 100வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களை பார்க்க கங்குலி அனுமதி கொடுத்தார் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்..! இதனை பற்றி நீங்க என்ன நினைக்குறீர்கள் என்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here