சதம் அடிக்க வேண்டிய வீரர் இப்பொழுது 30 ரன்களை மட்டுமே அடித்து வருகிறார் ; முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் வருத்தம்..!

0

அட… இவருக்க இப்படி ஒரு நிலைமை..! அதிக ரன்களை அடிக்க வேண்டிய இவர் இப்பொழுதும் குறைவான ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்து வருகிறார் என்று வருத்தமாக பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் தான் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 3 – 0 என்ற கணக்கில் இந்திய அணி இலங்கை அணியை வாஷ்-அவுட் செய்தது இந்திய அணி. அதனை தொடர்ந்து இப்பொழுது இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 357 ரன்களை அடித்தனர். பின்னர் இன்றைய இரண்டாவது நாளில் பேட்டிங் செய்து வருகிறது இந்திய அணி.

இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியளரான சஞ்சய் பங்கர் சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார். அதில் ” இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினார். ஆனால் இப்பொழுது அவரால் அவருக்கு பிடித்த ஷாட்ஸ் அடிக்க முடியமால் விளையாடி வருகிறார்.

அதிலும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 4 பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா, பின்னர் அடுத்த ஓவரில் இன்னொரு இரு பவுண்டரிகளை அடித்தார். அதனால் அவர் பவுன்சரை சுலபமாக கையாள தொடங்கினார் ரோஹித் சர்மா. ஆனால் 28 பந்தில் 29 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

ரோஹித் ஷர்மாவுக்கு நன்கு தெரியும் அவர் எந்த அளவிற்கு ரன்களை அடிப்பார் என்று. அவர் (ரோஹித் சர்மா) நிச்சியமாக 30 அல்லது 40 ரன்களை அடிப்பதில் சந்தோசப்படமாட்டார். அதனால் ஒரு போட்டியில் விளையாடும் போது அவர் எப்படி விளையாடும் என்று அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

அதிக பவுண்டரிகளை அடிக்க வேண்டுமா ?? அல்லது அதிரடியாக விளையாட வேண்டுமா என்பதை ரோஹித் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் சஞ்சய் பங்கர். விராட்கோலி-க்கு பிறகு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக விளையாடும் முதல் போட்டி இது.

இப்பொழுது இருக்கும் நிலைமையை பார்த்தால் நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணி அதில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here