ஐபிஎல் 2022 :சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இவர்கள் இதான் கிட்டத்தட்ட உறுதி

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 2022 போட்டி வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போன்ற இரு புதிய அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் மொத்தம் 10 அணிகளை கொண்டு விளையாட உள்ள காரணத்தால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது. இந்த முறை மெகா ஏலம் நடைபெற்றது. ஏனென்றால் புதிதாக இரு அணிகள் அறிமுகம் ஆன காரணத்தால் அனைத்து அணிகளும் சமமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் இந்த முடிவு எடுத்துள்ளதாக பிசிசிஐ கூறியது.

ஐபிஎல் போட்டிகளில் மற்ற அணிகளை விட மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றிய பேச்சு எப்பொழுது சூடுபிடித்து கொண்டு இருக்கும். அதுவும் இந்த முறை ஏலத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேனான டூப்ளஸிஸ் கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்த சிஎஸ்கே அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆமாம், டுப்ளஸிஸ் இந்த ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாட போகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை அணி கோப்பை வென்றதற்கு முக்கியமான காரணமே டூப்ளஸிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தான். ஏனென்றால் பல போட்டிகளில் பார்ட்னெர்ஷிப் செய்து ரணங்களை அடித்து தொம்சம் செய்தனர்.

அதில் ருதுராஜ் தக்கவைக்கப்பட்டதால் எந்த பிரச்சனையில் இல்லை. இப்பொழுது யார் ருதுராஜ் கெய்க்வாட்-டுடன் களமிறங்க போகிறார் என்ற கேள்வி தான் எழுந்து வருகிறது. சற்று நன்கு கவனித்து பார்த்தால் தெரியும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இறுதி நேரத்தில் நியூஸிலாந்து அணியை சேர்ந்த வீரரான டேவன் கான்வே 2 கோடி அடிமட்ட விலை கொடுத்து கைப்பற்றியது.

அதனால் டேவன் கான்வே இதுவரை நியூஸிலாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக தான் களமிறங்கி விளையாடி வந்துள்ளார். அதனால் நிச்சியமாக டூப்ளஸிஸ்-க்கு பதிலாக சிறந்த மாற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ராபின் உத்தப்பா நிச்சியமாக 3 அல்லது 4வதாக தான் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவன் கான்வே ஆகிய இருவரின் பார்ட்னெர்ஷிப் எந்த அளவிற்கு இருக்க போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் பற்றிய உங்கள் கருத்தை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here