சௌரவ் கங்குலி நம்பிக்கை வீணானது ; உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இவர் இல்லையாம் ; பிசிசிஐ உறுதி ;

0

ஐசிசி : உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்த்து பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் முழுவதும் ஆஸ்திரேலியாவில் தான் நடைபெற உள்ளது.

இந்திய அணியின் முன்னேற்றம் :

கடந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி மோசமான நிலையில் இருந்து வெளியேறியது. ஆனால் அதன்பின்னர் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அனைத்து விதமான தொடரிலும் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்று வருகின்றனர்.

இங்கிலாந்து, இலங்கை, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற அணிகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் திணறும் இந்திய :

என்னதான் இந்திய கிரிக்கெட் அணி மற்ற அணிகளுக்கு இடையேயான தொடரில் வென்றாலும், உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டும் இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது தான் உண்மை. அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையிலும் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இந்திய.

அதனால் இந்த முறை உலகக்கோப்பை போட்டிகளிலும் வெல்லுமா இந்திய அணி என்று கேள்விகள் எழுந்துள்ளது..?

இந்திய அணி அறிவிப்பு :

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் மற்றும் அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி காத்திருப்பு பட்டியலில் முகமத் ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷானி மற்றும் தீபக் சஹார் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கங்குலியின் நம்பிக்கை வீணானது …! முன்னணி பவுலர் தீடிர் விலகல் :

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடரில் விளையாட பும்ரா பயிற்சி செய்து கொண்டு இருந்த நேரத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார் பும்ரா. பின்பு உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவாரா ? இல்லையா ? என்று குழப்பம் எழுந்தது.

காயம் பெரிதாக இருப்பதாகவும் அதனால் உலகக்கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ; இன்னும் பும்ரா உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விலகவில்லை. என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம் என்று கூறினார்.

ஆனால் இன்று வெளியான தகவலில் ஜஸ்பிரிட் பும்ரா நிச்சியமாக இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து விலகிவிட்டார் என்று பிசிசிஐ உறுதியான தகவலை வெளியிட்டுள்ளது. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here