இதை மட்டும் சரி செய்யவேண்டியுள்ளது ; அதனால் தான் நாங்க ஆஸ்திரேலியாவிற்கு விரைவாக செல்கிறோம் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

இந்தோர் ; நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மூன்றாவது டி-20 போட்டியில் விளையாடினார்கள். அதில் டாஸ் வென்ற இந்திய பவுலிங்கை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியின் தொடக்க வீரரான தெம்பா பவுமா வழக்கம்போல பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தார். ஆனால் டி-காக், ரோஸோவ் மற்றும் டேவிட் மில்லர் விளையாடிய அதிரடியான ஆட்டத்தால் தென்னாபிரிக்கா அணிக்கு ரன்கள் குவிந்தன.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த தென்னாபிரிக்கா அணி 227 ரன்களை அடித்தனர். அதில் டி-காக் 68, தெம்பா பவுமா 3, ரோஸோவ் 100, ஸ்டப்ஸ் 23, டேவிட் மில்லர் 19 ரன்களை அதிதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா எதிர்பாராத வகையில் எந்த ரன்களையும் அடிக்காமல் விக்கெட்டை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி தினேஷ் கார்த்திகை தவிர்த்து மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தனர்.

தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த இந்திய அணியால் சரியாக ரன்களை அடிக்க முடியவில்லை. 18.3 ஓவர் வரை போராடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 178 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் தென்னாபிரிக்கா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது தென்னாபிரிக்கா.

அதனால் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளனர். போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; “நான் முன்பு சொன்னது போல், வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை. ஒரு அணியாக அனைத்து வீரர்களும் முன்னேறி கொண்டு வருகின்றனர். சமீபத்தில் விளையாடிய சீரியஸ் (ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா) அணிகளுக்கு போட்டியில் பல அனுபவம் கிடைத்தது.”

“இந்திய அணியில் பவுலிங்-கில் பக்கத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற்றுள்ள பல வீரர்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடியதே இல்லை. அதனால் தான் நாங்க உடனடியாக ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறோம். அங்கு பவுன்ஸ் பிட்ச் என்ற காரணத்தால் சில பயிற்சி ஆட்டங்களை ரெடி செய்து வைத்திருக்கிறோம். அப்பொழுது தான் எது சரியாக இருக்கும் என்ற பதில் கிடைக்கும்.”

“இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் ஜஸ்பிரிட் பும்ரா அணியில் இல்லை. அதனால் அவருடைய இடத்தில் சரியான வீரரை தேர்வு செய்ய வேண்டும். அதுவும் ஆஸ்திரேலியாவில் அனுபவம் வாய்ந்த வீரருக்கு தான் அதிகப்படியான வாய்ப்பு வழங்கப்படும், ஆனால் இன்னும் நாங்கள் உறுதியான யார் என்று முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”