ஐபிஎல் 2020 டி20 லீக் போட்டி ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்தியாவில் வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்தியாவில் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்த பிசிசிஐ , ஐக்கிய அரபு நாட்டில் ரசிகர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இப்பொழுது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 39 போட்டிகளில் நடந்து முடிந்துள்ளது. புள்ளிப்பட்டியளில் டெல்லி கேப்பிடல்ஸ் முதல் இடத்திலும் , பெங்களூர் அணி 2வது இடத்திலும், மும்பை இண்டிங்ஸ் 3வது இடத்திலும்,கொல்கத்தா அணி 4வது இடத்திலும் உள்ளது. நேற்று நடந்த 39 வது போட்டியில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 84 ரன்களை மட்டுமே எடுத்தனர்.
85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களம் இறங்கிய பெங்களூர் அணி வீரர்கள் 2 விக்கெட் இழந்த நிலையில் 13.3 ஓவரில் ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்றனர்.
தேவை இல்லாமல் பேசி சர்ச்சையில் சிக்கிய இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்…. ரசிகர்கள் கடும் எதிர்ப்பு… காரணம் இதோ!!!.
இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி முன்னாள் இந்தியா கிரிக்கெட் மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டன் ஆன கவுதம் கம்பிர் ;; கண்டிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் ஜெயிக்கும். ஏனென்றால் இதுவரை கொல்கத்தா அணி இருமுறை ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ளது. ஆனால் பெங்களூர் அணி ஒரு முறை கூட ஜெய்க்கவில்லை என்ற பதில் கூறியுள்ளார்.
இதனை அடுத்த போட்டியில் பெங்களூர் அணி மிகவும் சிறப்பாக விளையாடி 20 ஓவரில் 84 ரன்களை என்ற நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சுருட்டியது பெங்களூர் அணி.. இதனை பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கவுதம் கம்பிர் கருத்தை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இதனை ரசிகர்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.