ஐபிஎல் 2020 லீக் போட்டிகள் ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு நாட்டில் ரசிகர்கள் இல்லாமல் நடந்து வருகிறது.இதுவரை 40 போட்டிகள் முடிந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகவும் சோகமாகவும் வேதனையாகவும் இருக்கின்றன.ஏனென்றால் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இதுவரை 10 போட்டிகள் விளையாடி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் 8வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் , ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழைவது சாத்தியமா என்ற கேள்விகள் எழுகின்றன. இனிவரும் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ஏதேனும் வாய்ப்பு இருக்கலாம் என்று நம்ப படுகிறது.
இந்த வருடம் ஐபிஎல் 2020யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய ஒரே நபர் ஜடேஜா தான். ஏனென்றால் எல்லா போட்டிகளில் இறுதிநேரத்தில் அதிரடியாக விளையாடி உள்ளார்.
கண்டிப்பா சிஎஸ்கே அணி வெற்றி பெறும் …. சிஎஸ்கே அணியின் ஆல்-ரவுண்டர் கூறியுள்ளார்… !! யார் சொன்னது?… எப்படி முடியும்!!
ரவீந்திர ஜடேஜா இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 9 போட்டியில் விளையாடி 194 ரன்களை எடுத்துள்ளார். ஜடேஜா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே அணி கண்டிப்பாக ஜெயிக்கும், சிஎஸ்கே அணி மீண்டும் திரும்பி வரும், சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்று உறுதியாக கூறியுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.