ஸ்ரேயாஸ் ஐயர்-க்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் ; ரசிகர்கள் கோரிக்கை ;

நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை வென்றுள்ளனர்.

இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பி விளையாடி வரும் ஐயர் :

ஒரே நேரத்தில் மூன்று சர்வதேச அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடும் அளவிற்கு இந்திய அணியில் வீரர்கள் பலர் உள்ளனர். அதனால் இந்திய அணியின் ப்ளேயிங் 11 சரியான வீரரை தேர்வு செய்வதிலும், வாய்ப்பு கொடுப்பதிலும் சிரமமாக தான் இருக்கும். அதுமட்டுமின்றி, கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் ப் ளேயிங் 11ல் நிரந்திரமான இடத்தை கைப்பற்றிவிடாமல். ஆனால், வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் விளையாடும் பலர் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம்கிடைப்பதே சிரமமாக மாறிவிட்டது. அதில் ஒருவர் தான் ஸ்ரேயாஸ் ஐயர்.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார் ஸ்ரேயாஸ் ஐயர். ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022 க்கு முன்பு பல போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான நிலையில் விக்கெட்டை இழந்து கொண்டு வந்தனர். அதுமட்டுமின்றி பவுன்சர் போன்ற பந்துகளில் சுலபமாக விக்கெட்டை இழந்துவிடுகிறார் என்பது தான் உண்மை. நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 9 பந்தில் 13 ரன்களை அடித்த நிலையில் ஹிட்-விக்கெட் ஆனார்.

நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் பேட்டிங் செய்த முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். அதுமட்டுமின்றி, ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பல கிரிக்கெட் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனை பற்றி டொட்ட கணேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் ; சஞ்சு சாம்சன்-க்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்-ஐ தேர்வு செய்ததில் இருந்து நன்கு தெரிகிறது, இந்திய கிரிக்கெட் அணி ஒருபோதும் தவறை திருத்திக்கொள்ள மாட்டார்கள் என்று. அதுமட்டுமின்றி, டி-20 போட்டிக்கான அணுகுமுறையில் இருந்தும் இந்திய அணி மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க.. இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்-க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா அல்லது சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா ? உங்கள் கருத்து என்ன ?