விராட்கோலி இடத்தில் விளையாட வேண்டுமென்று தைரியமாக சொல்லவேண்டும் ; இவர் ஏன் பயந்து பேசுகிறார் ; முன்னாள் வீரர் ஆவேசம் ;

0

நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நேற்றுடன் நடந்து முடிந்துள்ளது. அதில் இரு போட்டிகள் மழை காரணமாக நிறுத்தினாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வென்றுள்ளனர். அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி :

பல திறமையான இளம் வீரர்களுக்கு அவ்வப்போது இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்து கொண்டு தான் வருகிறது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து 30 வயதிற்கு மேற்பட்ட வீரர்களை அணியில் இருந்து வெளியேற வேண்டுமென்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அணியில் இருக்கும் பல வீரர்களுக்கு சரியான வாய்ப்பும் கொடுக்கப்படுவதில்லை.

வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே தொடர்ந்து இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கும். மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்யும் தீபக் ஹூடா இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் அவருக்கு உலகக்கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. சமீபத்தில் தீபக் ஹூடா அளித்த பேட்டியில் தான் எந்த இடத்தில் விளையாட வேண்டுமென்று இறங்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

அதில் “விராட்கோலி 3வது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார். அதனால் நான் 5வதாக பேட்டிங் செய்ய ஆசைப்படுகிறேன். ஏனென்றால் விராட்கோலி போன்ற ஜாம்பவான் 3வதாக பேட்டிங் செய்யும்போது நான் எப்படி அந்த இடத்தில் விளையாட ஆசைப்படுவேன். அதுமட்டுமின்றி அந்த இடம் எனக்கு கிடைக்காது. அதனால் 5 அல்லது 6வது இடத்தில் விளையாடுவது சிரமம் தான், இருந்தாலும் நான் அந்த இடத்தில் விளையாடிய அனுபவம் சிறிது இருக்கிறது, அதற்குஏற்ப நான் விளையாடுவேன் என்று கூறியுள்ளார் தீபக் ஹூடா.”

இந்த போட்டியில் தீபக் ஹூடா 3வதாக களமிறங்கி விளையாட ஆசைப்படுகிறார். ஆனால் விராட்கோலி விளையாடி வருவதால் அதனை எப்படி சொல்வது என்று தெரியாமல் திணறினார் தீபக் ஹூடா. இதனை கண்டிக்கும் விதமாக பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமத் கைப் கூறுகையில் ; “தீபக் ஹூடா பேசியதில் தயக்கம் இருந்தது, அதனை அவர் பண்ணக்கூடாது. அவர் (தீபக் ஹூடா) நான் டாப் ஆர்டரில் தான் பேட்டிங் செய்ய ஆசைப்படுறேன் என்று உறுதியாக சொல்ல வேண்டும். நான் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட ஆசைப்படுகிறேன். நான் கே.எல்.ராகுல் இடத்தில் தொடக்க வீரராக விளையாட வேண்டும், விராட்கோலி இடத்தில் விளையாட வேண்டுமென்று தீபக் ஹூடா தைரியமாக சொல்ல வேண்டும். அப்படி இருந்தாலும் தான் சரியான இடத்தில் விளையாடி இந்திய அணிக்கு உதவியாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார் கைப்.”

இந்திய கிரிக்கெட் அணியில் தீபக் ஹூடா எந்த இடத்தில் பேட்டிங் செய்தால் சிறப்பாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here