நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்தர மோடி மைதானத்தில் நடைபெற்றது.


இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. ஒருவர் பின் ஒருவராக ரன்களை அடித்து விக்கெட்டையும் இழந்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 177 ரன்களை அடித்துள்ளனர். அதில் சுப்மன் கில் 45, மில்லர் 46, சாய் சுதர்சன் 20 ரன்களை அடித்துள்ளனர்.
பின்பு 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு மோசமான தொடக்க ஆட்டம் அமைந்தது. முதல் மூன்று ஓவரில் 4 ரன்களை மட்டுமே அடித்த நிலையில் 2 விக்கெட்டை இழந்தனர். அதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.


இருப்பினும் சஞ்சு சாம்சன், ஹெட்மயேர் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி காரணத்தால் 19.2 ஓவரில் 179 ரன்களை அடித்தனர். அதனால் 3 விக்கெட்டை வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றுள்ளனர். அதனால் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது ராஜஸ்தான் அணி.
இதற்கிடையில், குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் ஒரு கேட்ச்-ஐ நான்கு வீரர்கள் பிடித்துள்ளனர். அதன் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. நல்ல வேலை யாரும் மிஸ் பண்ணல ; சரியாக முதல் ஓவரில் போல்ட் வீசிய பந்தை எதிர்கொண்டார் சக.
அப்பொழுது சகா அடித்த பந்து எதிர்பாராத விதமான மேலே சென்றது. அதனை பிடிக்க விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஹெட்மயேர், துருவ ஜூரில் போன்ற வீரர்கள் முயற்சி செய்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக சஞ்சு சாம்சன் கையில் பட்டு ட்ரெண்ட் போல்ட் பிடித்தார்.
3⃣ players converge for the catch 😎
4⃣th player takes it 👏
🎥 Safe to say that was one eventful way to scalp the first wicket from @rajasthanroyals!
Follow the match 👉 https://t.co/nvoo5Sl96y #TATAIPL | #GTvRR pic.twitter.com/MwfpztoIZf
— IndianPremierLeague (@IPL) April 16, 2023